பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

221


இதே வழக்கம், மணிமேகலையில், அரசன் அரசிளங்குமரர் அரசமாதேவி முதலாம் அ ர ண் ம னை ப் பெண்டிர், ஆகியோர்க்கு அறிவுரை வழங்கி, அறநெறிகாட்டும், வாசந்தவை எனும் நரைமூதாட்டி, அரச மாதேவிக்குக் கூறும் பின்வரும் அறவுரையிலும் குறிப்பிடப்பட்டுளது." தருப்பைப் புல்மீது இடப்பட்டு, வாளால் வெட்டப்பட்டு. "அரச உரிமையைத் தம் கொற்றத்தால் பெற்றும், குடிகளைக் குறை நேராவாறு காத்தும், தம்மீது சினங்கொள்ளும் பகைவர் நாடுகளைத் தம் நாடாகக் கொண்டும், என்றும் போரே விரும்பும் பேரரசர்கள் செல்லும் சிறந்த வானுலகிற்கே இவரும் செல்வாராக" எனக்கூறி. அடக்கம் செய்வதற்கு வாய்ப்பளித்துப், போர்க்களத்தில் உயிரிழந்து போகாது, வறிதே மூத்து நோயுற்று உயிர் இழந்து போதல், சோழர் குடிப்பிறந்தார்க்கு, நாணத்தக்க இழிசெயலாம் : இது கூற என் நாக்கும் செயல்பட மறுத்துவிடுகிறது."

"கொற்றம் கொண்டு, குடிபுறம் காத்து,
செற்ற தெவ்வர் தேஎம் தமதாக்கியும்,
தருப்பையிற் கிடத்தி, வாளிற் போழ்ந்து,
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்குஎன
மூத்துவிளிதல் இக்குடிப் பிறந்தோர்க்கு

நாப்புடைபெயராது : நானுத்தகவு உடைத்தே."
-மணிமேகலை : 23 : 11-16.

ஒளவையார், இதை, பொதுவான ஒரு வழக்கம் எனக்கூறியுள்ளார் ; அது செயலாற்றப் படுவதை நேரில் கண்டிருக்கக் கூடும் என்பதும், ஆனால், மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், அதைச், சோழர் குடிக்கே உரிய சிறப்பு வழக்கமாக ஆக்கிப் பெரும்பாலும், காதுவழிச் செய்தியிலிருந்தே கூறியுள்ள என்பதும் குறிப்பிடத் தக்கனவாம். மேலும், ஒளவையார் பழந்தமிழ்ப் புலவர்கள் வழியைப் பின்பற்றிச் சமஸ்கிருத சொல்லாம் தருப்பை என்பதை ஆள்வது விடுத்துத் தமிழ் சொல்லாப் புல் என்பதை ஆண்டுள்ளார். ஆனால்