பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழர் வரலாறு


சாத்தனார், தருப்பை என்பதையே ஆண்டுள்ளார். இது. பிற அகச்சான்றுகளாலும் உறுதி செய்யப்பெறும் முடிவான, சாத்தனார், ஒளவையாரிலும். மிகவுப் பிற்பட்ட காலத்தவர் என்பதையே காட்டுகிறது. காரணம், அவர் இயற்றிய மணிமேகலை, ஆரிய, நாகரீகமும், பிராமண, பெளத்த, சமண இலக்கியங்களும், தமிழகத்து வாழ்க்கையில் ஆட்சி செலுத்தத் தொடங்கிவிட்ட காலத்தைச் சேர்ந்ததாம். போர்க்களத்தில் உயிர் இழக்காத அரசர் உடல்களை வெட்டிப் போலியான வீரத்தை அவர்க்கும் உரிமையாக்கும் வழக்கம், ஒரு வடஇந்திய வழக்கமா, அல்லது, தென்னிந்தியாவில், தங்களுடைய புனிதத் தன்மையை நிலை நாட்டிவிட்ட நிலையில், முன்னின்று செய்துவைக்க, பிராமணர்கள் அழைக்கப்பட்ட, தமிழ் வழக்கமா என்பதை உறுதி செய்ய என்னால் இயலவில்லை. இது போலும் வழக்கப் பற்றிய குறிப்பு ஏதேனும், அவற்றிடையே உளவா என்பது குறித்துக் காப்பியங்களையும், புராணங்களையும், தர்ம குத்திரங்களையும் ஆய்வது பயனுடைய ஒன்றாம்.

வான நூல் அறிவும், கணிநூல் அறிவும்:

புறநானூற்றிலும், அகநானூற்றிலும், மிகமிக அருகி இடம் பெற்றிருக்கும் வேத வேள்விகள், காப்பிய புராணக் கட்டுக் கதைகள் அல்லாமல், வான இயல் கருத்துக்கள், சோதிட இயல் மூடநம்பிக்கைகள் போலும் பிற அறிவியல் கருத்துக்களும், பையப்பைய வட இ ந்தி யா வி லி ரு ந் து, தென்னிந்தியாவுள் பரவலாயின. இது தொடர்பாக, வேத காலத் தொடக்கத்தில், வானவீதியில், திங்களின் பாதை, இருபத்தேழு அல்லது இருபத்தெட்டு நக்ஷத்திரங்களோடு தொடர்பு கொண்டிருந்தது என்பது நினைவில் கொள்ளத் தக்கதாம். அவ்வாறு கொள்வதன் பொருள், தொடக்கத்தில், வானத்தில் ஞாயிறு, திங்கள்களின் இடங்களைத் குறிப்பிட, வானநுால் அறிஞர்களுக்குத் துணை நின்ற சில விண்மீன் குழுக்களோடு பின்னர், ஞாயிறு செல்வதாகத் தோன்றும் ஒளிவட்டப் பகுதியோடு, தொடர்புடையதாயிருந்தது