பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தமிழர் வரலாறு


பட்டதும், வானியற் கலையிலிருந்து, சோதிடக்கலையை மிக மிக அருகியே வேறு பிரித்துக் கானத் தக்கதான, அறிவியற் சார்புடைய எனப்போலியாகக் கருதப்படுவதுமான, பிற்காலத்திய சோதிடமாக உருவெடுத்து விட்டன. முரண்பட்ட இயல்பின வாய இக்கோள்களின் கூட்டத்தில், ராகு, கேது என்ற, மேலும் இரண்டு உருப்படிகளும் சேர்க்கப்பட்டன. புறநானூறு, அகநானூறு பாக்களில் மிகவும் பிற்பட்டகாலத்துப் பாக்களில், சோதிடக்குறிப்புக்கள் பெரும்பாலும், அருகிய நிலையில் இடம் பெற்றுள்ளன ஆதலின், இப் புதுக்கருத்துக்கள், தென்னிந்தியாவை, ஏறத்தாழ, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டளவில் அடைந்திருக்க வேண்டும். புறம் 229ல், வானத்திலிருந்து எரிமீன் ஒன்று வீழ்ந்த நிலையைக், கூடலூர்கிழார் விரிவாக, விளக்கியுள்ளார். கலைத்துறை சார்ந்த சொற்களையும், சமஸ்கிருதத்திலிருந்து உடன்பெறும் பழைய வழக்கத்தை, அப் புலவர் பின்பற்றியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது, ஆறு விண்மீன்களின் தொகுதியாகிய அனுடத்தின் வடிவம், உண்மையான அல்லது கற்பனையான வளைந்த பனைமரம் போல் காட்சி அளிக்கும் ஆதலின், அது முடப்பனை எனப்பட்டது. புனர்பூசம், அது போலும் காரணம் கருதி [குளம் வடிவில் உளது. ஆதலின்] கடைக்குளம் எனப்பட்டது. இவைபோலும் விண்மீன் கூட்டங்களுக்குத், தமிழர்கள், வெளியார் கலைத் துறைத் துணை இல்லாமலே பெயர் சூட்டுவது இயலாத ஒன்றன்று. ஆனால், கார்த்திகை விண்மீன் கூட்டத்திற்குச் சூட்டியிருக்கும் அழற்கூட்டம் என்ற பெயர், நெருப்பு நகூடித்திரம் எனும் பொருளுடையதான, அதற்கே உரிய சமஸ்கிருதப் பெயர்களுள் ஒன்றான, அக்னி நட்சத்திரம் என்பதன் மொழி பெயர்ப்பே ஆகும். [இது அகம் 141ல் "அறுமீன்" (ஆறு விண்மீன்களின் கூட்டம்) எனவும் - "அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்" - மலை படுகடாத்தில், "ஆல்" (நெருப்பு) எனவும்,- "அகல் இரு விசும்பின் ஆல்" (100) அழைக்கப்படுகிறது. ரோகிணி, அகத்தில் "சகடம்" (தட்டு, அல்லது வண்டி) என அழைக்கப்-