பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

தமிழர் வரலாறு


நோயிலன் ஆயின் நன்றுமன் : தில்என
அழிந்த நெஞ்சம் அடியுளம் பரப்ப
அஞ்சினம் : எழுநான் நிதன்று : இன்றே

மேலோர் உலகம் எய்தினன்."

பின்வரும் பாடற் பகுதியில், அங்காரகன், அல்லது செவ்வாய், செம்மீன் என அழைக்கப்பட்டுளது. "கடல் நடுவே தோன்றுகின்ற, மீன்பிடிபடகுகளில் இடப்பட்ட விளக்குபோலச் செவ்வாய்மீன் விளங்கும், மாகம் எனவும் அழைக்கப்படும் விசும்பின் உச்சிக்கண் நின்ற உவாநாள் திங்களைக் கண்டு, காட்டு மயில்போல, காட்டுவழியில் நடைபயிலும், ஒருசில வளையங்களே அணிந்த விறலியும் யானும், மிகவிரைந்து கைகூப்பித் தொழுதோம்."

"முந்நீர் நாப்பண் தீயில் சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சிநின்ற உவவும்தி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும், வல்விரைந்து

தொழுதனம்."
-புறம் : 50: 1-6

வெள்ளிக்கோள், வெண்ணிறம் வாய்ந்தது : சனிக்கோள் கருநிறம் வாய்ந்தது : "சனிமீன், புகைகளோடு கூடிப் புகையினும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினும், தென்திசைக்கண்ணே, வெள்ளிக்கோள் போகினும், வயல்கள் விளைவு புெருக."

"மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

வயலகம் நிறைய"
-புறம் : 117 : 1-8