பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தமிழர் வரலாறு


பெற்றுள்ளது. வளைந்தோடும் பாம்பின் கூரிய பற்கலிருந்து மீண்டு உயிர் பிழைத்த மதி" - "வளைஇய பாம்பின், வைஎயிற்று உய்ந்த மதி" (புறம் : 260 : 16-17). மலைவாயில் வீழ்ந்து மறையும் ஞாயிறு, பாம்பால் விழுங்கப்பட்ட மதிபோல் விரைந்து மறையும். "கல்சேரி ஞாயிறு, அரவுநுங்கு மதியின் ஐயென மறையும்"-(அகம் : 114 : 4-5.) "பாம்பால் விழுங்கப்பட்ட திங்கள் போல் நெற்றி ஒளி இழந்தது. "அரவு நுங்கு மதியின் நுதல் ஒளிகரப்ப" (அகம் : 313 : 7).

ஆரியக்கருத்துக்களின் எண்ணிக்கைச் சிறுமை

குறுத்தொகை, நற்றிணைப் பாக்களில், ஆரியக்கருத்துக் குறிப்பீடுகள், புறக்கணிக்கத் தக்க அளவு, நனி மிகக்குறைவு. இத் தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான பாக்கள், அகநானூறு புறநானூறுகளில் இடம் பெற்றிருக்கும் பாக்களினும் பழையன என்பது ஒரு காரணம். பின்னர்க் கூறிய இரண்டினும், புறநானூற்றிலும், அகநானூறு பழம் பாடல்களை அதிகமாகக் கொண்டுளது. அதுவுமல்லாமல், காதற் கருப்பொருள், போர் பற்றிய கருப்பொருளினும், மிகப்பழைய தமிழ் மரபுகள் மேற்கொள்ளப்படுவதைத் தேவைப்படுத்துகிறது. இந்நான்கு தொகை நூல்களில், புறநானூறு, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவும், அவற்றிலும் பிற்பட்ட 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தனவும் ஆய பிற்பட்டகாலத்துப் பாக்களைப் பெருமளவில், கொண்டுளது கரிகாலன் காலத்திற்குப் பின்னரே, அரசர்கள் புலவர்களின் கற்பனைகளில் பெரிதும் விரித்துரைக்கப்பட்டனர். அரசர்களைப் புகழ்ந்து பாடிய அவர் பாடல்களும் பேணிக் காக்கப்பட்டன. பழங்காலத்தில், பெருநிலம் முழுதாளும் மன்னர்கள், குறுநிலத் தலைவர்களைப் பாராட்டிப் பாடப்பெற்ற பாடல்கள், அப்பாட்டுடைத்தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், சிறப்பிழந்துபோயின. ஆனால், அகப்பாக்களைப் பொருத்தபட்டில், காதல், மக்களுக்கு எக்காலத்தும் இன்பந்தரும் பொருளாதலின், அந்நிலயினை அடைந்துவிடவில்லை. நனி மிகப்பழங்காலத்திலிருந்தே,