பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள்

229


நமக்குக் கிடைத்து வந்த, அகத்துறைப் பாடல்கள், புறத்துறைப் பாடல்களை, எண்ணிக்கையில் வெற்றிகொண்டிருப்பதன் உண்மைக் காரணத்தை இது விளக்குகிறது. கிடைத்திருக்கும் நனி மிகப்பழைய தமிழ்ப்பாக்களைப் பெருமளவில் கொண்டிருக்கும் தொகை நூல்களில், ஆரியக்கோட்பாடுகள் பெற்றிருக்கும் சிற்றிடம், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர். ஆரியக் கருத்துக்கள். தமிழர்களால் சிறிதளவே கவரப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இவை, உண்மையில், நனி மிகச்சிலவே என்பது, தம்மைப் பற்றிய ஆய்வு மிகப் பெரிய நூலாகி விடுமளவு, தமிழ்ச்சடங்கு செயல்பாடுகளையும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்க, பண்பாடு மரபுகளையும், நூற்றுக்கணக்கில், இப்பாக்கள் குறிப்பிடுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளும் போது தெளிவாக உணரப்படும். இக்காலத்தைச் சேர்ந்த மக்களில் மிகப்பலரும், புலவர்களில் பெரும்பாலானோரும் பிற்கால அரசர்களால், அவ்வப்போது பெருமைப் பட்டுக்கொள்ளும், பிராமணர்களுக்கே உரிய ஆரிய நாகரீகத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இவ்வரசர்களில் சிலர், அவர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்க்கை பழந்தமிழ்ப் பண்பாட்டு நெறியில் நடைபெற்றது என்றலும், ஆரிய நாகரீகத்தோடு இணைந்து வாழ்வதையும் விரும்பினர், அவர்கள் யாகங்களை ஆதரித்தனர் வட இந்திய கூடித்திரிய ராஜாக்களின் குடிவழிப்பட்டியலில் இடம் பெறவும் விரும்பினர். பிராமணர்களும், அவர்கள் ஆசைக்கு இணங்கி, அத்தகு குடிவழி உரிமையைக் கொடுக்கவும் செய்தனர். [உ.ம் ; பாரிமகளிரை மணக்க மறுத்த இருங்கோ வேளைப் பழித்துப் பாடும் புலவர் கபிலர், அவனை வடக்கத்திய முனிவன் ஒருவனின் ஓமகுண்டத்தில் தோன்றி, துவார்பதி ஆண்ட வேளிர் வழிவந்தவன். "வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச், செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும்புரிசை, உவரா ஈகைத் துவரையாண்டு நாற்பத் தொன்பது வழிமுறைவந்த வேள்" [புறம் 201 : 8-12) எனல் காண்க.]