பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

235


அந்திக்காலத்தில், அந்தணர்கள், தாம் ஆற்றவேண்டிய செயற்கரிய கடனாகிய, ஆவுதி அளித்து எழுப்பும் முத்தி அளிக்கும் பேரொளியின்கண், அச்சம் ஒழிந்து இனிதே உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமலையும், பொதிய மலையும் போல, உயர்ந்து நின்று, நடுக்கின்றி, நெடிது வாழ்க!"

"மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,

வளி தலைஇய தீயும்

5.

தீ முரணிய நீரும் என்றாங்கு,
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்,
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் !

நின்கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும் நின்

10.

வெண்தலைப் புணரி குடகடல் குளிக்கும்,
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந !
வான வரம்பனை ! நீயோ, பெரும !
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ,

நிலந்தலைக் கொண்ட, பொலம்பூந் தும்பை,

15.

ஈரைம்பதின் மரும், பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,

திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி.

20.

நடுக்கின்றி நிவியரோ அத்தை ; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்