பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தமிழர் வரலாறு


முத்தீ விளக்கில் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே".
- புறம் 12.

பதினைந்து பதினாறாம் வரிகள் பொருள் தெளிவில்லாமல் உள்ளன. "போர்க் களத்தில் ஈரைம்பதின்மர் வீழ்ந்து ஒழிய பெருஞ்சோற்றினை வரையாது வழங்கின" என்கின்றன அவ்வரிகள். "ஒழிய" என்ற வினையெச்சம், பல் பொருள் தரவல்லது : 1) அவர்கள் வீழ, அதன் காரணத்திற்காக, 2) அவர்கள் வீழ்ந்த போது என்ற இவ்விரு பொருள்கள், அவற்றுள் முக்கியமானவை. இவ்விரண்டனுள், பின்னது, அவர்கள் வீழ்ந்த அந்தக் காலம், அல்லது, அவர்கள் வீழ்ந்த பின்னர், (அது, எவ்வளவு காலத்திற்குப் பின்னர், நாம் அறியோம்) என, இவ்விரு வகையாலும் பொருள்படுமாதலின், அது, தவறான பொருள் கொள்ளவும் இடந்தரவல்லதாம். வீழ, அதன் காரணமாக என்ற முதற்பொருளே, பொருந்தும் பொருள் ஆகும். ஆனால், தொடக்க நாட்களிலிருத்தே. தமிழ்ப் பேராசிரியர்கள், உதியஞ்சேரலாதன். அப்போர்க் களத்தில் இருந்தான் என்ற யூகத்தைத் தேவையுடையதாக்கும் வகையில், அத்தொடர்க்கு, அவர்கள் வீழ்ந்த அந்தக் காலம் என்ற பொருளே கொண்டுள்ளனர். அவர்களைப் பின்பற்றிப், பெரும்பாலான பழந்தமிழ் உரையாசிரியர்களைப் போலவே, புறநானூற்று உரையாசிரியரும், தம்முடைய உரையில், மூலத்தில் காணப்பெறாத, ஆனால், தம்முடைய பரந்த நூலறிவு, நுண்ணிய ஆராய்ச்சிகளின் பயனாகக் கண்டுகொண்ட பலசெய்திகளைக் கொண்டு வந்து இணைத்து, இச்சேர வேந்தன், போரிடும் இருதிறப் படைகளுக்கும், பெரும்பாலும் அப்போர் முடியுங்காறும், வரையாது உணவு வழங்கினான் என்று கூறியுள்ளார். [உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்! -புறம் : இரண்டாப்பதிப்பு: பக்கம் , 7] இப்புதுக் கருத்தைத் தம் உரையில் நுழைப்பதில், இவ்வுரையாசிரியர், பழந்தமிழ் அரசர்கள் பற்றிய கற்பனைக் கதைகளின், வரைந்து காணமாட்டாக் கருவூலமாய