பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தமிழர் வரலாறு


இயல்புடையதாகும். அல்லது, ஒருக்கால், பாரதப்போர் குறித்த நாடக நிகழ்ச்சிகளின் இறுதி நாள் விழா ஆதலும் கூடும்; ஏனைய நிகழ்ச்சிகளைப் போலவே, மகாபாரத நிகழ்ச்சிகளில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஒப்பனை செய்து கொண்டு. இசையும் பாட்டும் தொடர, நடிகர்கள் ஆடிக்காட்டும் ஊமை நாடகமாம், அந்நாட்டிற்கே உரியதான, கதகளி என அழைக்கப்படும் நாடகத்தால், சேரநாடு, பண்டைக் காலந்தொட்டே புகழ் வாய்ந்தது. அதுபோலும் கதகளியின் முடிவில், பெருஞ்சோறு படைத்தல், பெரும்பாலும் நிகழக் கூடியதே. ஆண்டாண்டு காலத்திற்கு முன்னரே இறந்துபட்ட வீரர்களுக்கு, இவைபோலும் இறுதிச் சடங்காம் பலியுணவு வழங்குதல் தமிழ் நாட்டில் பரவிய வழக்கமாகும். இறந்தோர்க்கு மரியாதை செய்யும் முறையாக, உணவு படைக்கும் இவ்வழக்கப் "பட்டவர்குறி" என அழைக்கப்படும். பண்டைப் பெருவீரர்களின் அருஞ்செயல்கள், நாடகமாக நடிக்கப் பெறுவதும், நாடக முடிவில் பெரிய விருந்து நடைபெறுவதும், தமிழ் நாட்டில், தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பெருவழக்கமாம். அது, இப்பொழுது, "கம்பசேர்வை" அல்லது "கம்பக்கூத்து" அல்லது "கழைக் கூத்து" என அழைக்கப்படுகிறது. அதன் முடிவில், அக்களியாட்டத்தில் பங்கு கொள்ளும், பண்ணையாட்களாம் "கம்பஞ்செய்மக்கள்" அவ்வூரின் விளை நிலங்களுக்கு உரியவராகிய பெரும் பண்ணை முதலாளிகளால், விருந்து படைக்கப்பெறுவர்.

பெருஞ்சோறு குறிக்கும் பிறபாக்கள்:

அகநானூற்றில் காணப்படும் இரண்டு குறிப்புகளும் கூட, இவ்வுண்மையையே கூறுகின்றன : அதிலும் ஐயத்திற்கு இடமில்லா வகையில். ஆகவே, பெருஞ்சேரலாதனின், பெரிதும் நாட்டிற்குரியதாகி விட்ட பெருஞ்சோறு படைப்பு, நகரத்தார் நினைவாக மேற்கொள்ளும் நிகழ்ச்சி, அல்லது ஓர் அரசன் விழாநாள் இறுதி நிகழ்ச்சியாம் என்ற முடிவிற்கு வர, முழுக்க முழுக்க அனுமானம் ஒன்றையே நாம் சார்ந்திருக்கத்