பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

தமிழர் வரலாறு


இப்போது கிடைக்கும் எட்டுப் பத்துக்களிலும் பாராட்டப் பெற்றிருக்கும் சேர அரசர்களின் வீரப்பெருஞ்செயல்களைத் தேர்ந்தெடுத்துச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் பதிற்றுப் பத்தின் சமகாலப்புலவர்கள் கூறும் செய்திகளையும், சி ல ப் ப தி கா ர த் தி ல் கூறப்பட்டிருக்கும் பிற்காலச் செய்திகளையும், பதிற்றுப்பத்துப் பாக்கள் பாடிய காலத்தினும், பல நூறு ஆண்டுகள் பிற்பட்ட காலத்தே பாடப்பெற்றனவும், பாடற்பகுதிகள் நம்புதற்கும் ஒண்ணாநிலையில், பெ ரு ம ள வி ல் திருத்தப்பட்டிருப்பனவுமாகிய பதிகங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளையும், பதிகங்களில் கூறப்பட்டிருக்கும் சேரஅரசர்கள் பற்றிய செய்திகளைப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஓரளவேனும் உறுதி செய்யுமாயின் ஏற்றுக்கொள்ளக்கூடும் என்ற நிலை இருக்கவும், ஒத்த வரலாற்றுச் சிறப்புடைய வாகக் கொண்டுள்ளார். அத்தகைய உறுதிப்பாடு ஏதும் கிடைக்காத போது, அப்பதிகங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை, உண்மையானவை என ஏற்றுக்கொள்ளுதல் அரிதாம். அவற்றில் அரசர் சிலரின் ஆட்சிக்கால அளவிற்கு, நம்புவதற்கு இயலாத மிக நீண்டகாலம் கொடுக் கப்பட்டுளது. மேலும், அப்பாடல்கள் தாமும், முந்தைய தொகை நூல்களில் காணப்படாத அளவு கலப்படங்களையும் கொண்டுள்ளன. இ ப் ப கு தி யை, அடுத்து வரும் ப கு தி யி ல், ஆராயப்படும் அரசர் குறித்த ஆய்வில், இதற்கான ஓர் எடுத்துக்காட்டு கொடுக்கப்படும். இம்மிகைப் படக்கூறல், பட்டாங்கு கூறும் பழைய இயல்புநிலை, மெல்ல மெல்ல இடம் இழந்து போக, சமஸ்கிருத காவியம் போலும் கற்பனை முறைகள், தமிழ்ப் புலவர்களை ஆளத்தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் :

பதிகத்திலிருந்து, வெளியன் வேண்மான் மகள் நள்ளினி வழி பிறந்த உதியஞ்சேரலாதனின் மகன் நெடுஞ்சேரலாதன் என அறிகிறோம். பகையரசன் ஒருவனின் அரசுரிமைச்