பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16.

தமிழர் வரலாறு


பெற்ற கம்பளி நெய்யும் குறும்பராவர். பெரும்புகழ்க் குரியவனும், வெல்லும்போர் வல்லவனுமாகிய கரிகாலன், குன்றுகளில் ஆனிரை மேய்க்கும் குறும்பர் குடியைப் பேணிக் காத்தான்.

‘’குறும் பறை பயிற்றும்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன்'’
- அகம் : 141 : 21-23

இப்பாட்டிலிருந்து உய்த்துணரப்படும், கரிகாலன் ஆட்சி, வடக்கே, கடப்பை, கர்னூல் ஒால் மாவட்டங்கள் வரையும் பரவியிருந்தது என்ற உண்மையை உறுதி செய்வதற்கு எண்ணற்ற கல்வெட்டுச் சான்றுகளும் உள. அவை, தனியே ஆராயப்படும்.

இப்பாட்டு, கரிகாலன், காடுகளை அழித்து அவற்றையெல்லாம் வாழிடங்களாக மாற்றினான் என்றும் கூறுகிறது. (காடுகொன்று நாடு ஆக்கி-பட்டினம் : 283) அது, சோழ தாட்டில் நிகழ்ந்ததாக, உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார். ஆனால் சோழ நாடு முழுவதும், இம்மன்னனுக்கு நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே மக்களால் வாழப்பட்டுவிட்டது; ஆகவே, இச்செயற்கரும் செயல், மிக மிகக் குறைவான மக்கள் தொகையினை உடையவாய கடப்பை, கர்னூல் மாவட்டிங்களையே குறிப்பிடுவதாகும். (சோழநாடு, ஐந்நிலம் என அழைக்கப்படாமல் நானிலம் என்று மட்டுமே அழைக்கப் படுவதற்கு ஏற்ப ("நால்நாடு'-பொருநர் : 226) அந்: நாட்டில் பெருமணல் பரந்த பாலை நிலம் அறவே இல்லை.) ‘’உள்ளூர் ஆவணங்கள், பழைய‘’ரேனாடு‘’ ஆகிய இன்றைய கடப்பை, கர்னூல் மாவட்டத்து மக்கள், கரிகாலன் படையெடுப்பை, இன்றும் நினைவில் கொண்டுள்ளனர். என்பதை வெளிப்படுத்துகின்றன. “கைம்யத் ஆவணம் ஒன்றின்படி, சூரிய வம்சத்துக் கரிகால மகாராஜா, மேற்கை வெற்றி கொண்டுவிடவே, இந்நாட்டின் உரிமையைப் பெற்று விட்டான். ‘’கரிகிரி‘’ மலையின் தென் பால் சரிவில்,