பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

257


பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவனின் வேறுபட்டவனாவன் என்பது தெளிவு. ஆனால், அக்கொளுக்களில் உள்ள குறிப்பு நம்பக் கூடியதா என்பது ஐயப்பாட்டிற்கு உரித்து.

தமிழ் அரசர்கள், ஆரியர்களோடு கடத்திய போர்கள் மீதான,

வரம்பிலாப்பொருளில் கூற்று.

சேரலாதன், பனவாசி அல்லது கொண்கானத்து ஆரியர்களோடு நடத்திய போர்கள் அல்லாமல், பிற்காலப் பாடல்கள், ஆரியர்களோடு நடைபெற்ற மேலும் சில போர்கள் பற்றியும் கூறுகின்றன : அவை பற்றிய ஆய்வினை, ஈண்டு எடுத்துக் கொள்வோம். அவற்றுள் இரண்டு, மருதத்திணை தழுவிய பாடல்களில் உவமைகளாக இடம் பெற்றுள்ளன. அழகுறத் தைத்த தழையாடை உடுத்துத் தனக்கு ஒப்பார் இல்லாதவளாய் விழாக்களமெல்லாம் தன் வரவால் பொலிவு எய்த வந்து நிற்கும் விறலி. கணவனைப், பரத்தையர் உறவு கொண்டு விடாவாறு காத்து நிற்கும் தோழியர் மீது கொண்ட வெற்றிக்குப்புகழ் வாய்ந்த முள்ளுர்ப் போர்க்களத்தில் உறை கழித்த வாளோடு களம் புகுந்த மலையமானது வேற்படை, அக்களத்தில் ஒன்றுகூடி நின்று போரிட்ட ஆரியரை வென்று ஓட்டிப் பெற்ற வெற்றியை உவமையாகக் கூறுகிறது அவ்விரண்டில் ஒரு பாட்டு.

"பிணையல் அந்தழைத் தைஇத், துணையிலள்,
விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே ;
எழுமினோ எழுமின் எம் கொழுநன் காக்கம் :
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஒடியாங்கு, நம்

பன்மையது எவனோ இவள் நன்மை தலைப் படினே."
-நற்றிணை: 170

த.வ.II-17