பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

தமிழர் வரலாறு

முள்ளுர், மலையமான் திருமுடிக் காரியின் தலை நகராகும். மலையன், மலையமான் என்ற சிறப்புப் பெயர்கள், அவன் சேர அரச இனத்தில் வந்தவன் என்பதைக் காட்டுகின்றன. "சிவந்த வேற்படையினையும், வீரக்கழலினையும் உடைய முள்ளுர்க்கு அரசனாகிய காரி என்பான், அழியா நற்புகழை நிலைநாட்டிய வல்வில் ஓரி என்பானைக் கொன்று, தெய்வ தச்சனால் இயற்றப்பட்ட, பலரும் புகழும் பாவை நிற்கும் ; சிவந்த வேர்ப்பலா மரங்கள் நிறைந்த கொல்லி மலையைச் சேரர்க்குக் கொடுத்தான் என்கிறது பிறிதொரு பாட்டு :

"செவ்வேல்
முள்ளுர் மன்னன் கழல் தொடிக் காரி,
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று, சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய

பலர் புகழ் பாவை."
- அகம் : 209 : 11-17.

காரி, ஓரியைக் கொல்வதற்கு முன்னர்க், கொல்லி மலைப்பகுதி ஓரியால் ஆளப்பட்டு வந்துளது. காரி, ஓரியைக் கொன்ற நிகழ்ச்சி, பழங்காலத்தவர் கருத்தை மிகவும் ஈர்த்துளது என்பது தெளிவு. காரி மற்றும் சோர்களைப் புகழ்ந்து பாடும் புலவர் கபிலர், "இளையாள் ஒருத்தி, தெருவின்கண் ஒருநாள் சென்றது காரணமாக, வழிவழி வந்த வெற்றிச் சிறப்பினையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல் வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி, அவ்வோரிக்கு உரிய ஒப்பற்ற தலைநகர்த் தெருவில் புகுந்ததைக் கண்ட, காரியின் பகைவராகிய அவ்வோரியைச் சார்ந்தவர் ஒ ன் று கூ டி எழுப்பிய பேரிரைச்சல் போல, இவ்வூரிலும் பேரொலி எழுந்துவிட்டது எனக் கூறுகிறார்.

"இளையோள் இறந்த அனைத்தற்குப், பழவிறல்

ஓரிக்,கொன்ற ஒரு பெரும் தெருவில்