பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழர் வரலாறு

முத்தரையர், மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, பிற்காலச் சோழர்களின் தலைநகங்களாக வகுக்கப்பட்டன.

மதுரை ஆண்ட ஒரு சிற்றரசன் ஆரியப்படை கடந்த (அல்லது தந்த) நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டுள்ளான். இது, பெரும்பாலும், ஆரியர் படைகளை வென்ற நெடுஞ்செழியன் எனப்பொருள் படுவதாகும். ஆனால், ஆரியப்படையோடு அவன் போரிட்டது எங்கும் குறிப்பிடப்படவில்லை: ஆகவே, அது வெறும் பட்டப்பெயரே ஆதல் வேண்டும். சிலப்பதிகாரம் இரண்டாம் காண்டத்து இறுதிக்கண் வந்துள்ள கட்டுரையில், இவன், கோவலனைக் கொலை புரியுமாறு ஆணையிட்டு, அதனால் கண்ணகியால், சபிக்கப்பட்டு, அதன் விளைவால் உயிர் துறந்தவனாக குறிப்பிடப்பட்டுள்ளான் :

“வடவாரியர் படைகடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புரைதிர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிவில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்.”
சிலம்பு : காண்டம் : 2 : கட்டுரை : 14 - 18:

ஆனால், சிலப்பதிகார மூலம், அவன் பெயரைக் குறிப்பிடவில்லையாகவே, கட்டுரைக் கண்வரும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயலாது. அவன் பாடியதாக ஒரு பாட்டு வருகிறது. தன் ஆசிரியனுக்கு ஒரு இன்னல் வந்துபோது, அது தீர முன்சென்று உதவியும், மிக்க பொருளை வாரிக்கொடுத்தும், ஆசிரியனை வழிபடும் நிலையில் வெறுப்பு காட்டாது விரும்பி வழிபட்டும் கற்பது ஒருவனுக்கு அழகு. ஒரே தன்மையான பிறப்புடையராய், ஒரு தாய் வயிற்றில் பிறந்தாருள்ளும் அவர்களின் கல்வி - உடைமை இன்மைகளுக்கு ஏற்ப, தாயின் அன்பும் வேறுபடும்; ஒரே குடியில் பிறந்த பலருள்ளும், கல்லாமையால் மூத்தோனை வருக என்றும் அழைக்காத அரசன் அவருள் அறிவுடையோன்