பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தமிழர் வரலாறு


"முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றான் என்ற வியப்பால் நெடியோன் என்றார்" எனக் கூறுகிறார் ஆதலின் இக்காலத் தமிழறிஞர்கள் கூறுவது தவறு.

குட்டுவனும் மோகூரும் :

குட்டுவனின் உண்மையான போர்க்கள வீரச்செயல் பின்வருமாறு விளக்கப்பட்டுளது : "பகைவர் அரண் கொள்ளச் செல்வார் அணியும், மெல்லிய உழிளுைக்கொடியின் மலர் அணிந்து, வெல்லும் போரே அறிந்த அறுகை என்பான், சேணிடத்தே இருந்தானாயினும், நண்பன் எனப் பலரும் கேட்க அறிவித்து, மோகூர் மன்னன் பழையனுக்கு அஞ்சித் தன் நாட்டை விட்டு ஓடி ஒளிந்து கொண்டதனால் உண்டாகிய அழியாப்பெரும் பழியைத் துடைத்தற்பொருட்டு, அப்மோகூர் மன்னன் அரண்களைத் தாக்கி, வருத்தும் தெய்வமே அழித்தாற்போல அழித்து, அவன் போர் முரசைக் கைக்கொண்டு, அவன் உரைத்த வஞ்சினத்தை அழித்துத் தன்னைப் பணிய வைத்து, அவன் காவல் மரமாம் வேம்பை வெட்டி வீழ்த்தி, அதை முரசு செய்தற்கேற்ற சிறுசிறு துண்டங்களாக்கி, அத்துண்டங்கள் ஏற்றிய வண்டியை யானைகளைக் கொண்டு ஈர்க்கச் செய்தவனே! கொழுப்பு குறைந்த இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்துவிட்ட, உச்சிக் கொண்டை உடைய கூகையைக் கவலையுறுமளவு வருத்தும் கூகைப் பெடைகள் நிறைந்த சுடுகாட்டில், வெற்றி முரசும், வழிவழியாக வந்த அரசுரிமையும் பெற்ற அரசர் பலரை வென்று, ஓயாது ஆடும் கடல் சூழ்ந்த பரந்த நாட்டை ஆண்டு, நம் வாழ்நாளை இனிதே கழித்த மன்னர்களை இட்டுப் புதைக்கும், வன்னி மரங்கள் நிறைந்த இடுகாட்டில், பெருமக்கட்டாழி, உன்னுடைய நோயற்று வலிவுற்ற உடலினைக் காணாது ஒழிக!"

"நுண்கொடி உழிஞை, வெல்போர் அறுகை
சேனன் ஆயினும், கேள் என மொழிந்து