பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழர் வரலாறு


இப்பாட்டு, அந்நகரையும், அதன் புறநகர்ப் பகுதிகளையும் விரிவாக விளக்குகிறது. தமிழகத்துப் பேரூர் ஒன்றின் சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் விளக்கங்கள் போல் அல்லாமல்,மிகைப்படுத்தப்படாத,உள்ளது உள்ளவாறேயான, மிகப்பழைய விளக்கம் இது ஆதலின், அது, அப்படியே தருவதற்குத் தகுதிவாய்ந்தது. ‘'அன்று முழுமதி நாள்; செம்பட்டை மயிருடையராகிய பெரிய பரதவர், கருமை நிறம் காட்டிக் குளிர்ந்திருக்கும் பரந்த கடல்மீது மீன்பிடிக்கப் போகவில்லை. அப்பாக்கத்தின் இடையில், மீன்பிடிக்கும் நெடிய தூண்டிற்கோல் சார்த்தப்பட்டிருக்கும் தாழ்ந்த கூரைகளைக் கொண்ட குடில்களின் முற்றத்து வெண்மணல் பர்ப்பில், நிலவொளியும், நிறை இருளும் மாறி மாறி, விட்டு விட்டுப் படிந்து கிடப்பதுபோல், மீன்பிடி வலைகள் விரித்துப் போட்டு உலர்த்தப்பட்டிருக்கும் பரதலர், தழையாடை விடுத்திருக்கும், மாமை நிற மேனியராம் மகளிரோடு, விழுதுகள் தொங்கும் தாழையின் அடியில் வளர்ந்திருக்கும் வெண்தாளி மலர் மாலை அணிந்து, கொடிய சினம் உடையதான சுறாமீனின் கொம்பை, அம்மணல் பரப்பில் நாட்டி அக்கொம்பில் குடிகொண்டிருக்கும் கொடிய தெய்வத்தை வழிபடல் கருதி, தலைமயிரில் தாழைமலர் அணிந்து, சருக்கை வாய்ந்த அடியினையுடைய பனைமரத்துக் கள்ளையும், தாம் விரும்பும் உணவு விதைகளையும், உண்டு, மகிழ்ந்து ஆடிக்களிப்பர். புலால் நாறும் மணற்பரப்பையும், மலர்களையும் உடைய கடற்கரைக்கண் கரிய மலையை அடந்த, பொன்னிற மாலை முகில் போலவும், கரிய நிறமேனித் தாய் மடியில் பால் உண்ணத் தவழ்ந்து கிடக்கும், செம்பட்டை மயிரான மழலை போலவும், தெளிந்து நீலநிறம் காட்டும் நீரோடு, காவிரி ஆற்றுக் கலங்கள் செவ்வெள்ளம் கலக்கும் அலைகளின் ஒலிஒயா அப்புகார்ப் பகுதியில் பண்டைய பாவம் போகக் கடல் நீரில் ஆடியும், கடல் நீர் ஆடியதால் உடலில் படிந்துவிட்ட உப்பு மாசினைப் போக்க நறும் புனலில் மூழ்கி எழுவர். அடுத்து நண்டுகளைப் பிடித்து ஆட்டம் காட்டுவர்: உரங்கொண்டு பாயும்