பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தமிழர் வரலாறு


ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ், வாயில் புறத்து இறுத்து."
-பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்து : பதிகம் : 4-20

ஈண்டு மேற்கோள் காட்டிய பகுதியின் முதல் நான்கு வரிகள், சேரன் செங்குட்டுவனின் வடஇந்தியப் படையெடுப்பு குறித்த சிலப்பதிகாரக் கூற்றிலிருந்து எடுத்த செய்திகளைக் கொண்டுள்ளன. பதிக ஆசிரியர், சிலப்பதிகார ஆசிரியரைப் பின்பற்றிச் செங்குட்டுவனைக், கடலோட்டிய வேல்கெழு குட்டுவனாக அடையாளம் கண்டுள்ளார். அடுத்த ஐந்து வரிகளும், கடைசி நான்கு வரிகளும், பழைய பாடல்கள் எதிலும் விரிந்துரைக்கப்படாத, ஆனால், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போர்களைக் குறிப்பிடுகின்றன. ([சிலம்பு 28; 115-119 காண்க. சோழர்குல இளவரசர்களோடு நடத்திய போர், சிலம்பு : 27 : 118-123லும் குறிப்பிடப்பட்டுளது.] இவ் வேறுபாட்டோடு, நிகழ்ச்சிகளின் வரிசையைத் தலைகீழாக மாற்றியுள்ளார்: ஏனைய வரிகள், சேரவேந்தன், பழையனோடு மேற்கொண்ட போர்பற்றிக் கூறுகின்றன. ஆனால், வேப்ப மரத்துண்டங்களை மகளிர் கூந்தலால் ஆன கயிறு கொண்டு யானைகளை ஈர்க்கப்பண்ணிய கதையினை நுழைத்துள்ளார். அறிவிக்குப் பொருந்தா இவ்விளக்க நுழைவு, பிந்திய தலைமுறையைச் சேர்ந்த மக்கள், பழங்காலத்திலிருந்து வரும் கதையினை, எவ்வாறு, தங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டும், அறிவொடு பொருந்தா அணிகளைப் புதிதாக நுழைத்தும் பெரிதாக்கிக் காட்டுகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இன்றைய அறிஞர்களும் கூட, அவற்றிற்கு, வழிவழிச் செய்தி எனும் பெயர் சூட்டி, எள்ளி நகையாடத்தக்க, ஒவ்வொரு கட்டுக்கதையினையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளத் துடிக்கின்றனர். பழம்பெரும் புலவர், இப்பொருள்களைத், தன் பாட்டிடைப் புகுத்தியிருந்தால், அதைப், பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் வழக்கம் உடைய அரசவைப் புல்வரின், மன்னிக்கலாம்