பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

19


அலைகளைக் கால்களால் உழக்கி விளையாட்டயர்வர் : மணலில் பாவை பண்ணுவர் ; ஐம்பொறிகளாலும் நுகரும் இன்பங்களையெல்லாம் நுகர்ந்து தீர்ப்பர். இவ்வாறு ஆன இன்பம் நுகர்ந்தும் மனநிறைவு காணாமல், மேலும் மேலுட் நுகரவேண்டும் என்ற தீராக் காதலோடு பகலெல்லாம் ஆடி மகிழ்ந்துவிட்டு, இரவு வந்துற்றதும், அப்பெருங் காவிரி மணலிலேயே படுத்து உறங்கிவிடுவர்.

“எக்காலத்தும் பொய்த்துப்போகாது, ஆண்டு முழுவதும் நீரோடிக்கொண்டிருக்கும் அக்காவிரி ஆற்றின், மலர்கள் உதிர்ந்து மண்டிக்கிடக்கும் இருகரை மருங்கிலும், நெடிய தூண்கள் மீது வானளாவக் கட்டப்பட்டிருக்கும் மாளிகைகiன் வாழ்வார், இசைப்பாடல் செவிமடுத்தும், நாடகங்களை நயந்து கண்ணுற்றும் மகிழ்வர். (ஈண்டு ஆளப்பட்டிருக்கும் நாடகம் என்ற சொல், சமஸ்கிருத நாடக” என்ற சொல்லாம். தமிழ்ப்பாக்களில் அச்சொல்லின் முதலாட்சி இது. இது, பெரும்பாலும், சமஸ்கிருத நாடகத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர்த் தமிழ்நாட்டில் பெரு வழக்கில் இருந்த உரையிலா மெய்ப்பாட்டு நாடகம் ஆதல் கூடும்.) மகளிர், மேனிலை மாடங்களில், நிலவொளியின் இன்பம் காண்பர்; கள் உண்டல் விடுத்துக், காமரதம் பருகுவர் பட்டாடை அகற்றிப் பருத்தி ஆடை ,உடுப்புர் அக்கோலத்தோடே, தம் கணவரைத் தழுவியவாறே உறங்கத் செல்வர். காதல் மயக்கத்தில், கணவர் அணிந்துகொள்ளும் தலைமாலையை மனைவியரும், மனைவியர் குடிக்கொள்ளும் கழுத்துமாலையைக் கணவரும் மாறி அணிந்துகொள்வர் பகற் போதில், மீன்பிடி படகுகளில் கடல் மேல் சென்ற பரதவர் அந்நள்ளிரவில், கரைக்கண் மாடங்களில் வரிசை வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளில், அவிந்தனபோக, அவியாது பேரொளி காட்டி எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை எண்ணியவாறே கரைநோக்கி மீள்வர்.

வெண்ணிற மலர்க் கொத்துக்களையும், மடல்களையும் கொண்ட தாழை மண்டிக்கிடக்கும் கடற்கரைக்கண், வணிகப்