பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

281


ஏனைய சேரச் சிறப்பாளர்கள் :

பதிற்றுப்பத்து, புகழ்பெற்ற சேரர் வேறு சிலர் பற்றியும் பாடியுள்ளது : புறநானூறும் மேலும் சிலரைக் குறிப்பிடுகிறது. அவர்கள், பொறையன், மலையன், வானவன், இமயவரம்பன், குட்டுவன், கோதை, மற்றும் வில்லவன் எனும் பட்டப் பெயர்களைக் கொண்டுள்ளனர்: அவர்கள் முடியுடை மன்னர்கள் அல்லர் ; அவர் குறித்துப் பாடும் பாடல்களும், வரலாற்றுச் சிறப்பு குறித்தன அல்ல ! வெறும் வாழ்க்கை வரலாற்றுச் சிறப்பு குறித்தனவே; ஆகவே, அக்குறுநிலத் தலைவர்கள், ஈண்டுக் குறிப்பிடத் தேவை இலர்.