பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

287

குப்பை நெலின் முத்தூறுதந்த கொற்ற நீள்குடைக் கொடித் தேர்ச்செழிய!” (புறம் : 24)

பெருங்கொடை வள்ளலாம் எவ்வி இறந்து விட்டான் : ஆனால், அவன் மறைவினைத் தாங்கிக் கொள்ளமாட்டாப் புலவர் வெள்ளெருச்சிலையார், “எவ்வி, மார்பில் வேல்பாய்ந்து விழுப்புண் பெற்று வீழ்ந்து விட்டான்” என விடியற் போதில் பரவிய செய்தி, பொய்யாகிப் போய் விடாதா ? போய்யாகி. விடுவதாக” என வாய்விட்டுப் புலம்பியுள்ளார். “பொய்யாகியரோ, பொய்யாகியரோ ...போரடுதானை எவ்வி, மார்பின் எஃகுறு விழுப்புண் பல, என வைகுறு விடியல் இயம்பிய குரலே” (புறம் : 238).

ஆனால், எவ்வி இறந்து விட்டது உண்மையாகி விட்டது: அவன் அளிக்கும் பரிசில் பெற்று வாழ்ந்த இரவலர் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிட்டது : துயர் உற்ற அவர்கள். தங்களின் முடிகளில் பூச்சூடுவதையும் கைவிட்ட காட்சியைக் கண்டு கண் கலங்கியுள்ளார். பரணர், “எவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர், பூவில் வறுந்தலை.” (குறுன் : 19).

வெற்றியே தரும் வாட்போர் வல்லவனாம் எவ்வி, ஒரு போரில், இறந்து போனானாக, அதுகாறும். அவன் புகழ் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த பாணர். அவனை, இனிப்பாடுவது இல்லாது போகவே, வழிபடுதெய்வம் போல் தங்களால் வழிபடப் பட்டு வந்ததும், வளம் மிக்க இனிய இசை எழுப்ப வல்லதும், வளைந்த தண்டினை உடையதுமான தங்கள் யாழை ஒடித்துப் போட்டுவிட்டனர்” “எவ்வி வீழ்ந்த செருவில், பாணர், கைதொழுமரபின் முன் பரித்தீடுப் பழிச்சிய, வள்ளுயிர் வளர்மருப்பு” (அகம் : 1.15) எனப்பாடி இரங்கும் மாமூலனாரும், பரணரும் நக்கீரரும் வாழ்ந்த காலத்தவரே அல்லது, திரு. பி. டி. எஸ். அவர்கள் கூறுவது போல் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டகாலத்தே வாழ்ந்த வரல்லர், !