பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தமிழர் வரலாறு


6. எழினி : சோழ வேந்தன் ஏவல் கேட்கும் குறுநிலத் தலைவனாய் இருந்தும், அச்சோழன் பணித்த யானை வேட்டைக்குச் சென்று துணைபுரியாமையால், சினங்கொண்ட சோழனால் சிறைபிடித்துப் பல் பறிக்கப்பட்டு, அப்பல்லை வெண்மணிவாயில் கதவில் பதித்துத் தண்டிக்கப் பட்டவனாக மாமூலனார் கூறும் எழினி, (’ பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக், கடுஞ்சின வேந்தன் ஏவ வின் எய்தி, நெடுஞ் சேணாட்டில் தலைத்தார்ப்பட்ட கல்லா எழனி பல்லெறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் (அகம் : 211), தலையாலங்கானப் போரில், நெடுஞ்செழியன் பால் தோல்வி கண்ட எழுவரில் ஒருவனாக, நக்கீரரால் கூறப்பட்டுள்ளான். ("போர்வல் யானைப் பொலம்பூண் எழினி’ (அகம் 36) ஆகவே, எழினியும், அவனுக்குத் தம்பாட்டிடை இடம் நல்கிய மாமூலனாரும், தலையாலங்கான்த்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவரே ஆவர்.

7. கட்டி : தமிழகத்தின் வட எல்லையாம் வேங்கடத்திற்கு அப்பாற்பட்டதான, வேற்று மொழி வழங்கும், வடுகர் என்ற இனத்தவர்க்கு உரிய நாட்டைச் சேர்ந்தவன்; வேற் படையால் வீறுபெற்றவன் என மாமூலனாரால் கூறப்படும் கட்டி. ('வடுகர் முனையது, பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎம் (குறுந் , 11 உறந்தையில் வாழ்ந்து வந்த வீரனும், வள்ளலுமாகிய தித்தன் என்பானோடு போரிட்டு வெல்ல எண்ணிப், பாணன் எனும் மற்போர் வல்லானோடு தமிழகம் வந்து, உறையூரை அணுகிய காலை, தித்தன்பால் பெரும் பரிசில் பெற்ற மகிழ்ச்சியால், அவன் புகழ்பாடும் பாணர் எழுப்பும் இனிய கினை இசையினைச் செவி மடுத்த அளவே, இத்துனைப் பெரும்புகழ் உடையானை வெல்வது இயலாது என உணர்ந்து போரிடும் எண்ணத்தையே கைவிட்டுப் பாணனோடு ஓடிவிட்டான் எனப்பரணரும், (’ பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப், போரடு தானைக் கட்டிப் பொராஅது ஒடிய ஆர்ப்பு. (அகம் : 226), அங்வாறு ஒடிய கட்டி, சேரமான் கணைக்கால் இரும்