பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

293


அந்நகர் எல்லையிலேயே, அத்தித்தன் புகழ்பாடும் இசைப் பேரொலி கேட்டு அஞ்சிப்போரிடும் எண்ணத்தையே கைவிட்டு ஒடிவிட்ட செய்தியையும் (அகம் : 226) பரணர் கூறியுள்ளார்: ஆகவே, பாணனும் அப்பாணனைப்பாடிய மாமூலனாரும், பரணர் காலத்தவர் : அப்பரணரால் பாராட்டப் பெறும் மூவேந்தர் காலத்து வாழ்ந்த முதியவர் என்பது இதனாலும் உறுதியாயிற்று.

11. புல்லி : வேங்கட நாடுடையான் ; கள்வர் கோமான் : மழவரை வெற்றி கொண்டவன் ; காட்டில் பிடிகொண்டகளிறுகளின் கோடுகளையும், கள்ளையும் விற்று வாங்கும் நெல் உண்டு வாழும் நல்லவன். புல்லி குறித்து மாமூலனார் கூறுவது இதுவே. ‘ அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, நறவு நொடை நெல்லின் நாண்மகிழ் அயரும், கழல் புனை திருந்தடிக், கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண்புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்.” (அகம் : 61)!.

பிடி யானைகள் காட்டகத்தே நின்று அலறக், களிறுகளாம் அவற்றின் கன்றுகளைக் கைப்பற்றிக் கொண்ட உவகையோடு, அவற்றைக் கள்ளின் விலையாகக் கள் விற்கும் மனைகளின் முற்றத்தே பிணிக்கும் வீரர்களைக்கொண்டவன். வேங்கடத்திற்கு உரியவன் புல்லி, ( மடப்பிடி கானத்து அலறக் களிற்றுக் கன்று ஒழித்த உவகையர்... நறவு தொடை நல் வில் புதவு முதல் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகள் புல்லி, வியன் தலை நன்னாட்டு வேங்கடம்’ (அகம்: 83) எனக் கூறுவதன் மூலம், புல்வி குறித்து மாமூலனார் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார் கல்லாடனார். . . . . . . .

வேங்கட நாட்டில் கொண்ட களிறுகளால் வீறுகொண்ட படையுடையார் பாண்டியர் 11:வேங்கடப் பயந்த வெண் கோட்டுயானை மறப்போர்ப் பாண்டியர்” (அகம் : 27) தென்னாட்டகத்தே உள்ள கெளரியர்க்கு உரிய நல்ல நாட்டில், சிறுசிறு காட்டரண்களை அமைத்துக் கொண்டு, பாண்டியர் தலைமைக்கும் பணிய மறுத்து வாழ்ந்திருந்த சிற்றரசுகளைக்