பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தமிழர் வரலாறு

 கள்வர் கோமான் ஏவல் கேட்கும் வீரர் துணையால் வெற்றி கொண்ட தென்னவன். "தெனா அது வெல்போர்க் கௌரியர் நன்னாட்டு உள்ளதை... கள்வர் பெருமகன் ஏவல் இளையர், தலைவன் மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடாஅ நல்லிசைத் தென்னவன்" (அகம் ; 342)] எனக் கூறியதன் மூலம், புல்லிக்கும், பாண்டியர்க்கும் உள்ள நட்புறவினை நாட்டியுள்ளார் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராம் நக்கீரரைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய மதுரைக் கணக்காயனார்.

ஆக, புல்லியும், அம்மதுரைக் கணக்காயர் காலத்தவனே அல்லது பிற்பட்ட காலத்தவன் அல்லன் என்பது உறுதியாயிற்று.

12. மத்தி : கட்டியின் வாழ்வோடு விளையாடியவன்; கட்டியைப் பாடிய புலவர்களே இம்மத்தியையும், அக்கட்டியோடு இணைத்தே பாடியுள்ளனர்; ஆகவே, கட்டிக்குக் கூறியது மத்திக்கும் பொருந்தும்.

13) மோகூர்ப் பழையன் : கள்ளக்குறிச்சியை அடுத்திருந்த மோகூரில் வாழ்ந்திருந்த குறுநிலத் தலைவன் பழையன்; மோகூர் மன்னன் எனவும் அழைக்கப் பெறுவன்: கோசர் படைத் தலைவனாகிய பழையன், பாண்டியர் படைத் தலைவனாகவும் பணி புரிந்து வந்தான். இதைப், "பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக்கோசர் தோன்றியன்ன" (மதுரைக்காஞ்சி :508-509) "மாறன் தலைவனாக, ஏந்தடுவாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப.” (மதுரைக்காஞ்சி : 771-778) என, மாங்குடி மருதனார் உரை தெளிவாக்குதல் காண்க.

பாண்டியர் படைத்தலைவனாய்ப் பணி புரிந்திருந்த போது, வெள்ளம் போலும் பெரும்படையோடு வந்து, பாண்டியர் தலைநகர் கூடலை வளைத்துக் கொண்ட