பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

295

கிள்ளிவளவனை, அவன் பகைவனாம் கோதை மார்பன் உவக்கும் வகையில் வெற்றி கொண்டு, அவனுக்குரிய குதிரைப்படை களிற்றுப் படைகளைக் கைப்பற்றிக்கொண்ட பழையன் பேராண்மையை, நக்கீரர் பாராட்டியுள்ளார்.


“பழையன் மாறன்
மாடமலிமறுகின் கூடல் ஆங்கண்
வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல்லமர் சா அய்க்
கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி
ஏதில் மன்னர் ஊர்கொளக்
கோதை மார்பன் உவகையிற் பெரிதே.”
- அகம் : 345


கிள்ளிவளவனை வெற்றி கொண்ட களிப்பு மிகுதியால் பழையன் மோகூரில் வாழ்ந்திருந்த போது, மாறன் எனப் பாண்டியர்க் குரிய குலப்பெயர் பூண்டும், அவர்க்கு உரிய மரமாம், வேம்பையே தன்னுடைய காவல் மரமாகக் கொண்டும், வாழ்ந்திருந்த பழையன் மீது சினங்கொண்ட செங்குட்டுவன். அம்மோகூர் மீது படையெடுத்துச்சென்று, பழையனை வென்று, அவன் காவல் மரமாம் வேம்பையும் வெட்டி வீழ்த்தித் துண்டுகளாக்கினான். இச்செயலைச், செங்குட்டுவன் அவைக்களப் புலவராம், பரணர் “மோகூர் மன்னன் முரசும் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து” (பதிற்று:44) என்றும், செங்குட்டுவன் உடன்பிறப்பு இளங்கோ அடிகளார் “பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு, வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய” (சிலம்பு : 27: 124-128) என்றும் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு முடியுடைய மூவேந்தர்களைப் பாடிய நக்கீரரும், பரணரும் பாடிய மோகூர் மன்னன் பழையன், தமிழகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்தோடு நெடிய