பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

தமிழர் வரலாறு

“முடமுதிர் பலவின் கொழுநிழல்
வதியும் குடநாடு” —அகம் : 19

இவ்வாறு சேரர் சிலர் வரலாறு உரைத்த அவர், “சோழர் வெண்ணெல் வைப்பின் நன்னாடு” (அகம்: 201) எனச்சோழ நாட்டு நெல்வளத்தையும் கூறியுள்ளார். சோழ நாட்டு வளத்தைப் பொதுவாகப் போற்றிய புலவர், வேலி ஆயிரம் விளையுமளவு சோழநாட்டை வளப்படுத்திய கரிகால் பெருவளத்தானையும், வெண்ணிப் போரில் அவன்பால் தோற்றுப் பெற்ற புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர் விட்ட ஆன்றோர்களையும் பாடியுள்ளார்.

“கரிகால் வளவ்னொடு வெண்ணிப் பறந்தலைப்,
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள் வடக்கு இருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும் பிறிது ஆகியாங்கு” —அகம் : 55

சேரர் குலத்துக் குட்டுவனுக்கு உரிய அகப்பாவை வென்று, அதைப் பகற் போதிலேயே தீயிட்டு அழித்த பெயர் அறியாச் சோழர் குலச் செம்பியன் ஒருவனையும் பாடியுள்ளார்.

“குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பு” —நற். 14

புல்லியின் பல்வேறு சிறப்புக்களைக் கூறும் நிலையில் அவற்றோடு இணைத்துப், பாண்டியர் பெருமையையும் கூறியதோடு அமையாது பாண்டியர்தம் யானைப்படைப் பெருமை; அப்படையுடைமையால் போர்க்களம் எதுவே ஆயினும், ஆங்கு வெற்றியே பெறும் விழுச்சிறப்பு, உலகம் பகம் அவர்தம் கொற்கைத் துறை, ஆங்குக் கொட்டிக்கிடக்கும்