பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகால்ன் 21

களையும் உடைய, அம்மாட மாளிகையின், மேகம் தவழும் மேல் மாடியில், சிவந்த அடிகள், திரண்ட துடைகள், உயர்ந்த அணிகள், பெரிய அல்குல், மேல்லிய ஆடை, பவளம் போலும் மேனி, மயில்போலும் சாயல், மான்போலும் நோக்கு, கிளி போலும் மழலை, மென்மையான சாயல் ஆகிய நலமெலாம் பெற்ற நங்கை நல்லார் தென்றல் காற்று உள்நுழையும் பலகணி அருகே அமர்ந்து காட்சி இன்பத்தில் ஆழ்ந்து போவர்.

               “நெடுந் தூண்டிலின் காழ் சேர்த்திய
                குறும் கூரைக் குடி நாப்பண், 
                நிலவு அடைந்த இருள் போல, 
                வலை வணங்கும் மணல் முன்றில், 
                வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த  
                வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர், 
                சினச் சுறவின் கோடுநட்டு 
                மனைச் சேர்த்திய வல்லணங்கினான், 
                மடல் தாழை மலர் மலைந்தும் 
                பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும், 
                புன்தலை இரும்பரதவர் 
                பைந்தழை மாமகளிரொடு 
                பாயிரும், பனிக்கடல் வேட்டம் செல்லாது 
                உணவு மடிந்து உண்டாடியும் 
                புலருமணல் பூக்கானல் 
                மாமலை அணிந்த கொண்மூப் போலவும், 
                தாய்முலை தழுவிய குழவி போலவும், 
                தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும் 
                மணி ஒதத்து ஒலிகூடல் 
                தீது நீங்கக் கடல் ஆடியும், 
                மாசு போகப் புனல் படிந்தும்; 
                அலவன் ஆட்டியும். உரவுத்திரை உழக்கியும்,