பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல்

309


சமண, புத்தசமயங்களின் செல்வாக்கு உயர்தல்

நெடுஞ்செழியன் காலத்தில், மதுரைப்புறநகரில், ஆரிய சமயங்கள், குறிப்பாக, புத்த, சமண சமயங்கள் வழக்கத்தில் இருந்தன. [மதுரைக்காஞ்சி : 475 - 483, 487 வரிகளைக் காண்க.] அரசர்களால் பெரிதும் பேணப்பட்டவை, பழைய தமிழ்ச்சமயங்களே என்றாலும், கி. பி. 470ல், சமணப்பேரவை ஒன்று மதுரையில் நிறுவப்பட்டது [தமிழ் வரலாறு : பக்கம் : 247 அடிக்குறிப்பு காண்க.] இந்நிகழ்ச்சி, சமண எழுத்தாளர் ஒருவரால் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுளது. ஆகவே, தமிழ்நாட்டில், ஆரிய சமயம் ஒன்று ஆதரவைப் பெற்றுவிட்டது. தமிழகத்தில் உறுதியான ஓர் இடத்தைப் பெற்றுவிட்டது என்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகவே, இதை எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வுண்மையோடு, இதே காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில், புத்த சமயத்திற்கும் இதுபோலும் சிறப்பிடம் அளிக்கப்பட்டிருந்தது என்பதையும் இணைத்துக் கொள்ளலாம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் கடைசி நான்காம் பாகத்தின்போது, புத்தகோசருக்குக் காலத்தால் முற்பட்டவராகிய, புத்த தத்தர் பெளத்த நூல்கள் பலவற்றைச் சோழ நாட்டிலிருந்து எழுதினார். அபிதம்மாவதாரம் என்ற தம் நூலின் இறுதியில் இவ்வாறு கூறியுள்ளார். "இழிந்த சாதியினராகாமல் உயர்ந்த சாதியினராகிய ஆடவர். மகளிரைப் பெருந்திரளாகக் கொண்டதும், ஒரு பெருநகருக்குத் தேவைப்படும் அனைத்தையும் பெற்றிருப்பதும், ஆற்றிலிருந்து வந்து பாயும் பளிங்குபோல் தெளிந்த நீரைக் கொண்டதும், பல்வகை நவரத்தினங்களால் நிறைந்ததும், பல்வேறு வகை அங்காடிகளைக் கொண்டதும், பற்பல மலர்ச்சோலைகளால் அழகு பெற்றதும், சுற்றுச்சுவர்களில், பல்வேறு வகைப்பட்ட அழகிய கோபுரவாயில்களைக் கொண்டதாய்க் கண் ஹதாசர் என்பவரால் கட்டப்பெற்றதும், கைலாய மலைமுகடுக்கு நிகரான உயர்வுடைய மாளிகையால் அழகு பெற்றதுமாகிய அழகிய, இனிய தவப்பள்ளியினைக்