பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தமிழர் வரலாறு


கொண்டதுமாகிய அழகிய காவிரிப்பூம்பட்டினத்தில், ஆங்குள்ள ஒரு பழைய வீட்டில் வாழ்ந்திருந்த போது, நல்ல தலைப்புக்களில் அழகாக எழுதுவது போலும் சிறந்த பண்புகளால் புகழ் பெற்றிருந்தவனும், சிறந்த அறிவுடையவனும், நல்லவனும் இரந்து உண்டோனும் ஆகிய என்னால் இது எழுதப்பட்டு, விரிவாக விளக்க உரையும் செய்யப்பட்டது.

நர நாரீகனாகிண்ணெ அசங்கிண்ண குலாகுலெ
பீதெ சப்பன்க கம்பன்னெ பகன்ன சரிதுாதகெ
நாநாரதன சம்புண்ணெ விவிதாபண சங்கதெ
காவெரீ பட்டனெ ரம்மெ நாநாராமொ பசொப்ஹிதெ
கெலாச சிகராகார பாசாத பதி மண்டிதெ
காரிதெ கண்ஹதாசென தஸ்ஸநீயெ மனொரமெ
விகார விவிதாகாரசாரு பாகார கொபுரெ
தத பாசீன பாசாதெ மயா நிவசதா சதா
ரம்ம கல்லெக சாகல்ய சீலதி குண சொப்ஹினா
சுயம் சுமதினா சாது யாசிதென கதொ ததொ.
அபிதம்மாவதாரம் : சுலோகம் 1409 - 1413:

வாழ்த்துப் பாக்களின் முடிவில், பிற்கால எழுத்தாளர் சிலர், "அபிதம்மாவதாரம் என்ற இந்நூல், உரகபுரத்தில் (உறையூரில்) வாழ்ந்திருந்த பஹ்தந்த புத்த தத்த ஆச்சாரியரால் இயற்றப்பட்டது" என்ற பின்னுரையினை இணைத்துள்ளனர். [உரகபுர நிவாசிகென ஆசிரியென ப்ஹதந்த புத்ததத்தென கதொ அவிதம்மாவதொரொ, நாமாயம்." உரகபுரத்தில் வாழ்வோன் என்பதன் பொருள் பெரும்பாலும் அந்நகரின் குடிமகன் என்பதே ஆம்:

விநய விநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில், புத்ததத்தர் இவ்வாறு கூறுகிறார். "அனைத்துவகை மக்களைக் கொண்டதும், சோழப் பேரரசின் கடற்றுறை நகரானதும், வாழைத் தோட்டங்களாலும், பனை தென்னைத் தோப்புக்