பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல்

317


புரந்திருக்க முடியாது என்றும், தில்லைச் சிவன் கோயிலில் முடிசூட்டு விழா மேற்கொண்டு, சோழநாட்டில் புத்த விகாரங்களை ஆதரிப்பதும், மதுரையில் திராவிட சமண சங்கத்தை ஆதரிப்பதும் செய்ய இயலாது என்றும் கூறும் தடை, மதிக்கத்தக்க தடையாகாது. தென்இந்தியாவில், ஆரிய சமயங்கள் பரவத்தொடங்கிய பழங்காலத்தில், அவர்களிடையே புறச்சமய வெறுப்பு சிறிதளவே குடிகொண்டிருந்தது. புறச்சமய வெறுப்பு முதன்முதலில் தலைதுாக்கிய கி.பி. 600க்குப் பிறகே அவர்கள் சண்டை தொடங்கலாயிற்று, மகேந்திர விக்ரம பல்லவன் சமணர்களுக்கும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், திரிமூர்த்திக்கும் கற்கோயில்கள் கட்டினான். அவனுடைய காலத்தில்தான். சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் எழுந்த முதல் வாய்ச்சண்டையினைக் கேட்கிறோம். ஒரு நூற்றாண்டிற்குப் பி ன் ன ர் , வைஷ்ணவர்கள், சைவர்களை எள்ளி நகையாடுவதையும் சைவர்கள், விஷ்ணுவை மதிக்காது பழிப்பதையும் நாம் காணுகிறோம். ஆனால் கி. பி. 600க்கு முன்னர், ஆரியச் சமயநெறி நிற்போர், செல்வாக்கு பெறத்தொடங்கிய போது, அவர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்பதை நாம் கேட்கவில்லை. ஆகவே அச்சுதகளப்பாலனும், அச்சுத களப்பனும் ஒருவரே என எடுத்துக்கொள்ளலாம்.

23வது அதிகாரத்தில் ஆராயப் பெற்ற வேள்விக்குடி செப்பேடு, களப்ரன் அதாவது, களப்ரர் வழிவந்தவன் என்ற கொடுங்கோல் அரசன் ஒருவன் பல அதிராஜாக்களையும், பழையதமிழ் அரசர்களையும் வென்று, ஏனைய தமிழ் மாவட்டங்கள் அல்லாமல் மதுரையிலும் தன் ஆட்சியை நிறுவினான் எனக்கூறுகிறது. பாலிமொழி, "களப்ஹ", சமஸ்கிருதத்தில் "கலப்ர" என முறையாகத் திரியும் ஆதலின், வேள்விக்குடிச்செப்பேட்டின் களப்ர அரசன், அச்சுத களப்பன், மற்றும் அச்சுத களப்பாளனே ஆவன் என்பது தானே பெறப்படும். தமிழ்நாட்டினைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டு வருவது முழுமை பெற்றுவிட்டது எனக் கூறப்படும் நிலையிருந்தாலும், பழைய தமிழ் அரச இனங்கள்,