பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 23

                       நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 
                       அளந்தறியாப் பல பண்டம், 
                       வரம்பறியாமை வந்தீண்டி 
                       அருங்கடிப் பெரும் காப்பின் 
                       வலியுடை வல்லணங்கினோன், 
                       புலிப் பொறித்துப் புறம் போக்கி, 
                       மதி நிறைந்த மலிபண்டம் 
                       பொதி மூடைப் போர் ஏறி, 
                       மழையாடுசிமைய மால்வரைக் கவாஅன், 
                       வரையாடு வருடைத் தோற்றம் போலக் 
                       கூருகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை, 
                       ஏழகத்தகரொடு உகளும் முன்றில் 
                       குறுந்தொடை, நெடும்படிக்கால்,
                       கொடுந்திண்ணைப் பல்தகைப்பின் 
                       புழைவாயில் போகுஇடை கழி, 
                       மழைதோயும் உயர்மாடத்துக்  
                       சேவடிச் செறி குறங்கின், 
                       பாசிழைப் பகட்டல்குல், 
                       தூசுடைத் துகிர் மேனி, 
                       மயில் இயல், மான் நோக்கின் 
                       கிளி மழலை. மென் சாயலோர், 
                       வளி நுழையும் வாய் பொருந்தி"
                                                 -பட்டினப்பாலை : 90 - 151 

அத்துறைமுகப் பட்டினத்துப் பெரும் சிறப்புகளாவன கடல் மீது கலங்களில் வந்த, நிமிர்ந்த செலவினை உடைய குதிரைகள் நிலமிசை வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகள்; வடநாட்டு மலைகளில் எடுக்கப்பட்ட மாணிக்கமும், சாம்பூநதம் என்னும் பொன்னும் மேற்கு மலையில் வளர்ந்த சந்தனமும், அகிலும் தென்பாற்கடலில்