பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : XXVII
பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

எஞ்சியுள்ள ஆறு பாடல்கள்

பத்துப்பாட்டு என்ற தலைப்பின்கீழ்த் தொகுக்கப்பெற்ற பாடல்களில், நான்கு பாடல்கள் முன்னரே, ஆய்வு செய்யப் பெற்றன. ஏனைய ஆறும் பிற்காலத்தவை : கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. அப்பாடல்களில் இடம் பெற்றிருக்கும் ஆரியக்கருத்துக்கள், வெளிநாட்டவரின் அரைகுறை நம்பிக்கைகளின் போகிற போக்கில் இடம் பெற்றுவிட்ட, குறிப்புகளாக, தமிழர் உள்ளத்தில் இடம் பெறுதற்காம் தொடக்க நிலை முயற்சியாக அல்லாமல், தமிழரின் வாழ்க்கை முறைகளில் இரண்டறக் கலந்து நன்கு வேருன்றி விட்ட, தமிழரின் பழம்பெருங் கொள்கைகளை விரைந்து அழித்து ஒழிக்க வல்லனவாம் என்ற உண்மை நிலையால், இது உறுதி செய்யப்படும். மேலும், இப்பாடல்கள், கரிகாலன் அல்லது இளந்திரையன், அல்லது நெடுஞ்செழியன் போலும் பெரிய வெற்றி வீரர்களைப் பாடவில்லை ; மாறாக, சேர சோழ, பாண்டியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப்பிறகு அரசாளத் தொடங்கிய ஒரு குறுநிலத்தலைவனையோ, அல்லது முருகன் போலும் கடவுளையோ, அல்லது குறிப்பிட்ட ஒரு பாட்டுடைத் தலைவன் இல்லாத நிலையிலேயே பாடப் பெற்றுள்ளன. மேலும், இப்பாடல்கள், அப்போது நடைமுறையில் இருந்த தொல்காப்பிய இலக்கண விதிமுறைகளை ஒட்டியே பாடப் பெற்றுள்ளன; அதாவது, அவை, காவியம், நாடகங்களின் விதிமுறைகள் யாவை என்பவை அரிஸ்டாட்டில் அறிந்து கொள்ளத் துணைபுரிந்தனவாய, ஹோமரின் வீரகாவியங்கள், பழைய கிரேக்க நாடகங்கள் போலப், புலவர்களின் இயற்கையோடு ஒட்டிய கற்பனை வளம் காரணமாக கருவிலே