பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

325


வெண்மேகம் அகன்ற பெரியவானிடத்திலிருந்து சிறுசிறு துவலைகளைத் துளவிக்கொண்டே இருக்க, அழகிய அகன்ற பெரிய வயல்களில் நிறைந்த நீராலே செழித்து வளர்ந்த வளமான தோகைகளைக் கொண்ட நெற்பயிரிலிருந்து வெளிப்பட்ட கதிர்கள் முற்றித் தலைசாய்த்துக் கிடக்க, பெரிய அடியினையுடைய பாக்குமரத்தின் நீலமணி நிறங் காட்டும் கழுத்தில், வளமாகக் கொழுத்தமடலில் பாளை விரிந்த பெரிய குலைகளில், நுண்ணிய நீர் திரளும்படிப் பருத்துத்திரண்டு, தெளிந்த காய்கள் இனிமையுறமுற்ற, அடர்ந்த கிளைகளில் நெருக்கமுற மலர்ந்த மலர்களைக் கொண்ட அகன்ற பெரிய மலர்ச்சோலைகள்."

"புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்,
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்கனி பரந்த ஈரவெண்மணல்
கெவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல்எதிரக், கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகவிரு விசும்பில் துவலை கற்ப,
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வண்கோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,
முழுமுதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொடுமடல் அவிழ்ந்த குழுஉக்கொள் பெருங்குலை
நுண்ணிர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு
தெண்ணிர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற

ஒளிகொள் சிமைய விரவுமலர் வியன்கா."
-நெடுநல் : 13-27