பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

335

நொடிதரு பாணிய பதலையும், பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிக் காய கலப்பை".
-மலைபடு : 1-13

ஒரு பெண்ணின் மார்பு, ஒவியம் தீட்டி அழகு செய்யப் பெற்றது: "வனை புனை எழில் முலை" (57) எனக் கூறப் படுவதால், இப்பாட்டிலிருந்து அக்காலத்தில் வண்ண ஓவியம் பொது மக்களிடையே பயில இருந்தது என்பது தெரிகிறது; அரசர்கள் நாள்தோறும் அரசவையில் அமர்ந்திருந்து தன்னைப் பாடிப் புகழும் புலவர் பாணர், கூத்தர் போல்வார்க்குத், தாம் வெற்றி கொண்ட பகையரசர்களின் அரசு முழுவதையும் கொடுத்தும் மனநிறைவு கொள்ளாமல், பெருமழை பெய்து ஓய்ந்த, பருவம் பொய்யாது பெய்யும். மேகம், மேலும் பெய்வது போல, மேலும் மேலும் பரிசில் பொருள்களை வாரி வாரி வழங்குவர். நல்லவர்களே கூடியிருக்கும் அவ்வரசவையில் தாம் கற்றவற்றை விளங்கக் கூறி, பரிசில் பெறுவான் வந்தவர், தாம் கற்றவற்றை முழுமையாக மற்றவர்க்கும் விளங்கும் வகையில், சொல்லமாட்டாத நிலை ஏற்படுமாயின், அரசனைச் சுற்றியிருக்கும் சான்றோர்கள், அச்சான்றோரின் மாட்டாமையைப் பிறர் உணர்த்து கொள்ளாவாறு காத்து, அவர் கூறக் கருதியனவற்றைச் சோர்வு ஏற்படாவாறு சொல்விக் காட்டி, அவர்களைப் பெருமையுற நடத்தி விடை கொடுப்பர்". ஈண்டுக் குறிப்பிடப்பட்டிருக்கும் சான்றோர் பெ ரு ம் பா லு ம் சமஸ்கிருதப் பண்டிதர்கள் ஆவர்.

“புகழுநர்க்கு
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாண் மகிழ் இருக்கையும்,
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லாராயினும் புறம் மறைத்துச் சென்றோரைச்