பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தமிழர் வரலாறு


சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம்."
-மலை படு : 73-80.

மலைநாட்டு மரம் செடி, கொடிகள் பற்றிய புலவரின் விளக்கம் ஒரு சிறந்த இயற்கைப் பாடலுக்கான் பெருமைமிகு எடுத்துக்காட்டாம். அகன்ற பெரிய வானில் காட்சி அளிக்கும் கார்த்திகை மீன்போல் வெண்ணிற மலர்களை மலர்த்திக் காட்டும் மெல்லிய கொடியினை உடைய முசுண்டை, பெருமழை பெய்வதால் நீர் நிறைந்து கிடக்கும் பெருமட்கலங்கள்போல், நீரால் நிறைந்த சுனைகள் பலவற்றைக் கொண்ட குறுங்காட்டில் தோடுகள், நீல நிறம் உடையவாய்ச் செழித்து வளர்க எனவேண்டி விதைத்த நிலத்தில், மகுளி எனும் நோய் தாக்காமையால், இளங்காயாம் தன்மை இழந்து முற்றிய கரிய காய்கள், ஒரு பிடியில் ஏழு காய்களே அடங்குமளவு பெருத்தும், தன்னகத்தே நெய் நிறைந்திருக்கவும், வளர்ந்திருக்கும் பலவாகக் கிளைத்த எட்செடிகள், விளையாட்டின் பொருட்டுத் தமக்குள்ளே பொய்யாகப் போர்புரியும் யானைக் தன்றுகளின், ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கும் கைகளைப் போலத், தம்முள்ளே பிணைந்து கிடக்கும் அறுக்கும் பதமாக முற்றிக் கிடக்கும் பருத்த கதிர்களைக் கொண்ட தினை; தினையரி தாள்களில், தயிரைத் தெளிர்த்தாற்போல் வெண்பூக்களை உதிர்த்துவிட்டு, அரிவாள் போலும் வடிவின்வாய்க் காய்களைக் காய்த்துக் கிடக்கும் அவரை: எருமைகள் படுத்துக் கிடப்பது போல் பெருங்கற்கள் செறிந்த காட்டு வழியை அடுத்து, பட்டிமன்றங்களில் தருக்கம் கூறுகின்றவன் கையில், இணைந்த விரல்கள் போல, இணைஇணையாக வெளிப்பட்டிருக்கும் கதிர்கள் முற்றி வளைந்து, அரிவாளால் அரிதல் உறும். பெரியபுனத்து வரகு, காற்று நன்கு ஊடறுத்துப் பாய்தலால், நன்கு பால் பிடித்து முற்றி ஒன்று பலவாய்க் கிளைத்து விளைந்த ஐவன நெல்லும் வெண்ணெல்லும்; காற்று ஆரவாரித்துப் பெருக வீசிய