பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

337


நிலையிலும், வேல் ஏந்திய வீரர் பெரும்படை அழிந்து வீழ்ந்து போனது போல் ஒடிந்து போவதோ, அற்றுச் சாய்ந்து போவதோ ஆகாமல், வெட்டப்பட்டு ஆலைக்குச் சென்று பயன்படுமாறு நிற்கும் இனிய கரும்பு, மழையால் "மாசு போக்கப்பட்ட பூக்கள் மலிந்த காட்டில், அவலிடிக்கும் பக்குவம் உடையவாய், அழகிய குலையிடத்தவாய மூங்கில் நெல், உழாமலே விதைக்கப்பட்டாலும், களைக்கோட்டால் நன்கு கொத்தி விடப்பட்டமையால் பெருக விளைந்த வெண்சிறு கடுகு, வெண்ணெல் அரிந்து விடப்பட்ட வயல்களில், வயல் கருநிறம் கொண்டதாமோ, எனக் கருதுமாறு நீண்ட, நறுமணம் கொண்ட நெய்தல் மலர்ந்திருந்தன; செய்யாத பாவை போலும் வடிவினவாய் அழகுற முற்றி உறைப்பைக் கொண்டிருந்தது இஞ்சி. பிடி யானையின் முழந்தாள் போலும் குழிகள் தோறும் மாவாம். தன்மையைத் தன்னிடத்தே கொண்டிருந்தது, கவலை எனும் கிழங்குக் கொடி. கைத்தடியிலே கோத்தவேல், களிற்றின் முகத்தைக் குத்தி நின்றதுபோல், மடல் உதிர்ந்த பூவோடு கூடிய காய்க்குலை, மலைமுகடுகளைத் தீண்டி நிற்க, வளர்ந்திருந்த வாழைகளைக் கொண்ட சோலை, பெரும் பெரும் குலை களாகக் காய்த்துத் தாமே உதிர்ந்து போகுமளவு முற்றிப் பயன்படும் தன்மை உடையவாயின. பெருமூங்கில் நெல் பரந்த பாறை நிலங்களில் உள்ள பயன்தருமரங்கள், பருவம் இல்லாப் பருவத்துப் பழுத்துப் பயன் தரும் தன்மையவாதலின், காற்றடித்து உதிர்ந்து கிடந்தன நாவற்கணிகள்: உண்டார் வாயில் நீர் ஊறப்பண்ணும் உயவைக் கொடி, நீர் வேட்கை போக்கும் தண்ணிருக்கு மாறாகப் படர்ந்திருந்தன சாறு மிக முற்றிக் கிடந்தன கூவைக்கிழங்கு தம்மை உண்பார்க்கு வேறு ஒன்றின்பால் செல்லும் வேட்கையைத் தடுக்கவல்ல இனிய சாறுடையவாய்க் கனிந்திருந்தது மா. புறத்தோல் புண்போல் வெடித்து, அகத்துள்ள கொட்டைகள் சிந்திப் போகுமாறு பழுத்துக்கிடந்தது பருத்த அடியையுடைய ஆசினிப்பலா. விரல் தீண்ட ஒலி எழும் சிறுபறை ஒலித்தது போல, பேராந்தைப்பேடும் சேவலும் மாறி மாறிக்

த.வ.II-22