பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

341


படை, அவர்களை, நல்லியர் கோடன் அவைக்குப் போகுமாறு. வழிகாட்டுகிறது. இப்பாடல்கள், குறுநிலத்திலைவர்கள் புகழ்பாடவே பாடப் பெற்றுள்ள நிகழ்ச்சி ஒன்றே. சேர, சோழ, பாண்டியப் பேரரசர்கள் சிறப்பு இழந்துவிட்டனர் என்பதற்கான அறிகுறியாகும். இந்த முடிவு- இப்பாடலாசிரியர்,- கொடைவளத்தில், நல்லியக்கோடன் மூவேந்தர்களிலும், ஏழு கொடை வள்ளல்களிலும் சிறந்தவன் எனப்புகழ்வதாலும், போகிறபோக்கில், அம்மூவேந்தர்கள், மற்றும் ஏழு சிற்றரசர்களின் சிறப்புப் பற்றிய குறிப்புகளைக் கூறியிருப்பதாலும் உறுதி ஆகிறது. "கொழுத்த மீனெல்லாம் துண்டுற்றுப் போகுமாறு நடந்துசென்று, வளமான இதழ் களைக்கொண்ட செங்கழுநீர்ப்பூவை மேய்ந்த பெரியவாயை உடைய எருமை, மிளகுக்கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்விய இலைகள் மேனியைத் தடவா நிற்க, முற்றாஇளந்தேன் மணக்குமாறு அசைபோட்டவாறே, காட்டுமல்லிகையாகியபடுக்கையில் படுத்து உறங்கும் மேற்கு திசைக் கண்ணதாகிய நாடு". அதாவது சேரர்க்கு உரிய நாடு.

"கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறம் தைவர
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்

குடபுலம்."
-சிறுபாண் : 41 - 47

மலர்கள் தேன் கொட்டும் நுணாமரத்தின் வெட்டிக் கொண்ட மரக்கட்டையைக் கூரிய உளியால் குடைந்து, கைத்திறத்தால் கடைந்து செய்த மாலையினை உடையதும், நெட்டியால் செய்த தலைமாலையைக் காதின் கீழே சூட்டப்பட்டதும், வலிய எருதுகளைக்கொண்ட உப்புவணிகரின் வண்டிகளோடு வந்ததும், அவர்கள் வளர்ப்பதால், அவர்களின்