பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

தமிழர் வரலாறு

கொண்டிருக்கும் இடங்களுக்கான வழி காட்டியாம்: இப்பாட்டில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், மலைகள், சோலைகள் ஆகிய இடங்களில், முருகன் வழிபாட்டு முறையினை விளக்கியுள்ளார் நக்கீரர் தமிழ்முருகன், ஆறுமுகம் கொண்ட ஆரியக் கார்த்திக்கேயனாகவும், விண்மீன்களாம் கார்த்திகைப் பெண்கள் அறுவரின் வளர்ப்பு மகனாகவும் மாறியகாலமாம், ஆரியக் கருத்துக்கள், தமிழர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தின் இறுதிக் கட்டத்தைச் சேர்ந்தது. இப்பாட்டு முருகனுக்கான தனித்தமிழ் வழிபாட்டு முறைகள் மறைந்து போய் சண்முகனுக்கான ஆரிய வழிபாட்டு முறைகளோடு ஒன்றிவிடுவதை இதில் கண்டு கொள்ளலாம். "எண்ணெய் காணாது காய்ந்த மயிரினையும், வரிசை இழந்து பிறழ்ந்த பல்லையும், பெரிய வாயினையும், சினத்தால் சுழலும் பார்வையினையுடைய கண்ணையும், கொ டி ய பா ர் வை யி னை யு ம், விழி பிதுங்கிய கூகையோடு, கொடிய விஷம் உள்ள பாம்பும் கிடந்து உறங்குவதால், முலையளவும் தொங்கிய காதினையும், பெரிய வயிற்றையும், கண்டார் அஞ்சத்தக்க நடையினையும் உடைய, கண்டாரை நடுங்கப் பண்ணும் பேய்மகள், குருதிபடிந்த கூரிய நகத்தினைக் கொண்ட விரலால் கண்கள் தோண்டி உண்ணப்பட்டு விட்டமையால் முடைநாற்றம் நாறும் தலையைத் தொடிவிளங்கும் கைகளில் ஏந்தியவாறே பின்கவராம் அவுணர்க்கு அச்சத்தைத் தரவல்ல போர்க்களத்தைப்பாடி, தோளை அசைத்து நினம்தின்னும் வாயுடையளாய்த் துணங்கை கூத்தாடா நிற்பள்."

"உலறிய கதுப்பின், பிறழ்பல், பேழ்வாய்ச்,
சுழில்விழிப் பசுங்கண், சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு துாங்கப்
பெருமுலை அலைக்கும் காதின், பிணர்மோட்டு,
உருகெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்,
குருகி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல்