பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345

தமிழர் வரலாறு


வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையாமுக்கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து, நுாறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை,
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்

நாற்பெரும் தெய்வத்து."
- முருகு ; 150-159.

திருச்சீரலைவாய் குறித்த பாடற்பகுதி, கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தமிழ் இலக்கியங்களுக்குத் தெரியாத வகையினதான, முருகனின் ஆறுதிருமுகம், பன்னிரண்டு கைகள் ஆற்றும் பணிகள் குறித்த பெரிய விளக்கத்தைத் தருகிறது. திருவேரகத்து உறை முருகன் புகழ்பாடும் நான்காம் பகுதி, பிராமணர் வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.

"கற்றல் கற்பித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்த்ல், ஈதல், ஏற்றல் ஆகிய இந்த ஆறு இயல்புகளில் விழுவாமல், தாய் தந்தை ஆகிய இருவர் குலங்களையும் நன்று நன்று என உலகத்தவர் பாராட்டுதற்குக் காரணமாய பழைய குடியில் பிறந்த, இளமை இன்பம் துய்க்க வேண்டிய நல்ல ஆண்டுகள் நாற்பத்தெட்டையும், மெய்ந்நூல் காட்டும் வழி முறையில் நின்று காத்த, எப்போதும் அறமே கூறும் கோட்பாட்டினையும், ஆசுவனீயம், தக்கினாக்கினி, காருக பத்தியம் என்ற் முத்தீயினை நம்பி அதனால் பெறலாகும் பேற்றினையும் உடைய, முந்நுால் அணிவதற்கு முன்பு ஒரு பிறப்பும், பின்னர் ஒரு பிறப்பும் என்ற இரு பிறப்பாளனும் அந்தணர், வழிபடுங் காலமறிந்து வாழ்த்துக் கூற, ஒன்பது நூல்களைக் கொண்ட, ஒருபுரி மூன்று ஆக வரும் நுண்ணிய பூனூலை அணிந்த, நீராடுங்கால், தோய்க்கப்பட்ட ஆடை உடுத்திய அளவிலேயே புலர்ந்து போமாறு புலராதே உடுத்து,