பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

347

தலைமேல் கூப்பிய கையினராய்த் துதித்து, ஆறு எழுத்துக்களால் ஆன. கே ட் ட ற் கு அரிய அருமறையாம் திருமந்திரத்தை, நாவசைக்கும் அளவானே ஓதி, மணம் மிக்க ம்லர்களைத் துாவி வழிபட, அவர் செயலுக்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்னும் ஊரில் எழுந்தருளி இருக்கவும் செய்வன்"


"இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினில் கழிப்பிய, அறம் நவில் கொள்கை,
மூன்றுவகைக் குறித்த முத்திச் செல்வத்து,
இருபிறப் பாளர் பொழுது அறிந்து துவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காமுகம் புலரஉடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி,
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன்"
- முருகு : 177-189.

இவ்விடத்தில் முருகன் வழிபாடு, முழுக்க முழுக்க ஆரிய முறைப்படியே நடைபெற்றுளது. ஆனால், மலை நாடுகளில், குன்றுதோறாடல் எனும் பகுதியில் கூறியிருப்பது போல், முழுக்க முழுக்க தமிழ் முறைப்படியே நடைபெற்றுளது, ‘வேலன், பச்சிலைக் கொடியால், நல்ல மணம் மிக்க மிக்க சாதிக்காயை இடையில் இட்டு, அழகிய தக்கோலக் காயையும் கலந்து, காட்டு மல்லிகையோடு வெண்டாளியையும் கலந்து கட்டிய தலைமாலை உடையனாய், நறுமணம் மிக்க சந்தனம் அணிந்த அழகிய மார்பினை உடைய, கொல்லும் தொழிலில் வல்ல, வில்லால் காட்டு உயிர்களைக் கொல்லும்