பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

349

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் :
நறுஞ்சாந்தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர,
விரல் உலர்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டு சுனைபூத்த வண்டுபடு கண்ணி,
இணைத்த கோதை, அனைத்த கூந்தல்
முடித்தகுல்லை, இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு,
சுருப்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்,
கச்சினன், கழவினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும்பல் இயத்தன்,
தகரன், மஞ்ஞையன், புகரில் சேவல் அம்
கொடியன், நெடியன், தொடிஅணி தோளன்,
நரம்பார்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண்சாயல்,
மருங்கில்கட்டிய நிலன்ஏர்பு துகிலினள்,
முழவு உறழ் தடக்கையின் இயலஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத், தலைத்தத்து

குன்று தோறாடலும் நின்றதன் பண்பே."
-முருகு : 190-217.

பழமுதிர்சோலை எனப்படும் இறுதிப்பகுதி, தமிழர், வழிபாட்டு நெறியும், ஆரியவழிபாட்டு நெறியும் இரண்டறக் கலந்து போவதை நாம் காணக் கூடிய நிலையில், முருகனின், பழைய வழிபாட்டுமுறை, அவனைப் பற்றிப் புதிதாகக் கூறப்படும் புராணக் கதையோடு கலந்து விடுவதை உணர்த்துகிறது. சிறிய தினை அரிசியை மலர்களோடு கலந்து வைத்து