பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 தமிழர் வரலாறு

                       "பல்கேள்வித் துறையோகிய
                        தொல்வாணை நல்லாசிரியர் 
                        உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்”. 
                                                    - பட்டினப்பாலை : 189 - 171

அந்நகரத்து வணிகப் பெருமக்கள், வேதக் கடவுள்களாம் அமரர்களை வழிபட்டனர்; அவர்களுக்கு வேள்விகள் செய்து ஆவுதி அளித்தனர். (வேள்விகளில் பலியிடுவான் வேண்டி) ஆக்களையும், ஆணேறுகளையும் வளர்த்தனர்; நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களைப் புகழ்ந்து பாராட்டினர், ஆகவே, பிராமண வழிபாட்டு முறை அந்நகர மக்களிடையே பரவியிருந்தது;

                    "அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
                     நல்ஆனொடு பகடு ஒம்பியும் 
                     நான்மறையோர் புகழ் பரப்பும்" -
                                             -பட்டினப்பாலை : 200 - 202

இறவாப் பெரும்புகழ் வாய்ந்த அவ்வமரர்கள், நகரின் காவலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் (செல்லா நல்லிசை அமரர் காப்பின்’ -பட்டினப்பாலை : 184) குற்றம் தீர்த்துப் புகழ் ஏற்றி நிறுவப்பட்ட கடவுள்களும், ஆரியக் கடவுளாகவே தெரிகின்றன. ('மையறு சிறப்பின் தெய்வம் சேர்ப்பிய’ -பட்டினப்பாலை 159)

பழந்தமிழ்க் கடவுள்களும் வழிபடப்பட்டனர்:

    ஆரியகடவுள்களின் கடுந்தாக்குதலால், பழந்தமிழ் கடவுள்கள் கைவிடப்பட்டுவிடபடவில்லை. நகரங்களில் அக்கடவுள்களும் சிறப்புற்றிருந்தனர். அகன்ற பெரிய அங்காடி வீதிகளில் வெறியாடு மகளிரின் ஆடல்பாடல்களுக் கேற்ப குழலும் யாழும் இசைக்க, முழவும், முரசும் முழங்க நடைப்பெறும் முருகவேள் விழா இடையறவு படாது. நிகழ்ந்துக்கொண்டிருக்கும்.