பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

தமிழர் வரலாறு

 ஆட்டை அறுத்து கோழிக் கொடியை, அவன் அக்கொடியில் இருப்பதாகக் கருதி நட்டுவைத்து, ஊர் தோறும் எடுத்தவிழா"

"சிறுதினை மலரொடு விரைஇ, மறிஅறுத்து,
வாரணக்கொடுயொடு வயிற்படநிறீஇ

ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவு."
- முருகு : 218 - 220


நெய்யோடு வெண்சிறுகடுகையும் அப்பி, வழிபட மொழியும் மந்திரத்தைப் பிறர் கேளாவாறு மெல்ல உரைத்து, வழிபட்டு, அழகிய பெரிய மலர்களைத் துாவி, நிறத்தாலும், அளவாலும் வேறுபடும் இரண்டு ஆடைகளை உடுத்து, சிவந்த நூலைக், கையில் காப்பாகக் கட்டி, வெள்ளிய பொரியைச் சிதறி, மிக்க வலிபொருந்திய பெரிய கால்களையுடைய கொழுத்த ஆட்டுக் கிடாயின் குருதி கலந்து பிசைந்த வெள்ளை அரிசியைச், சிறுசிறு பலியாகப் பலபிரப்பங் கூடைகளில் வரிசையாக வைத்து, சிறிய பசிய மஞ்சளோடு, சந்தனம் முதலாம் பல நறுமணப் பொருட்களைத் தெளித்து, பெரியகுளிர்ந்த செவ்விலரி மாலையினையும், வேறுபல மாலைகளையும், ஒரே அளவாக வெட்டித் தொங்கவிட்டு, அடர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள ஊரெல்லாம், பசியும், பிணியும், பகையும் நீங்கி வாழ்க என வாழ்த்தி, நல்ல மணம் தாறும் புகைகளை எழுப்பி, குறிஞ்சிப் பண்பாடி இமிழ் எனும் ஓசைஎழ உருண்டோடிவரும் அருவிகளோடு, இனிய இசை பலவும் ஒலிக்க, செந்நிறம் வாய்ந்த பல்வேறு மலர்களைத் தாவிக் காண்பவர்க்கு அச்சம்வரக் குருதியொடு கலந்த அரிசியைப் பரப்பி வைத்து"

"நெய்யொடு ஐயவி அப்பி, ஐது உரைத்துக்,
குடந்தம்பட்டுக், கொழுமலர் சிதறி,
முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச்

செந்நூல் யாத்து, வெண்பொரி சிதறி,