பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டின் பிற்காலப் பாடல்கள்

351


மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய துரவெள் அரிசி
சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரீஇச்,
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் துரங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி,
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் துாஉய் வெருவரக்

குருதிச் செந்தினை பரப்பி."
-முருகு : 228 - 242.

இதைத் தொடர்ந்து, ஆரியப் புராணக்கதைகளிலிருந்து மேற்கொண்ட குமரன் பிறப்புப் பற்றிய நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. இறுதியாக, "பழங்களால் நிறைந்த சோலைகள் மலிந்த மலைநாட்டு இறைவா", "பழம்முதிர் சோலை மலைகிழவோனே" (முருகு 317) எனும், தொடரோடு முடிகிறது.

இதிலிருந்து முன்னூறு ஆண்டு காலம் வரை, தமிழ் இலக்கியத்திலிருந்து, முருகன் அறவே கைவிடப்பட்டுள்ளான்; சிவனும், விஷ்ணுவும், மக்களின் பிரித்து அறியமாட்டாக் கவனத்திற்கு உரியராகித் தமிழ்ப் புலவர்களின் குறிப்பிட்ட வழிபாட்டுக்கு உரியராகி விட்டனர்.