பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

353


பண்டை இலக்கிய நயம் எப்போதோ அழிந்து விட்டது :

இத்தொகை நூலில் தொகுக்கப்பெற்றிருக்கும் 150 பாடல்களும் பாடப்பெற்றிருக்கும் கலி, ஒ ரு வ கை ப் பாவினத்தைச் சேர்ந்தது. ஐங்குறு நூற்றில் உள்ளது போல், ஒவ்வொரு தினையும் வேறு வேறு ஆசிரியரால் பாடப்பெற்றுளது. இப்பாடல்களும், தொல்காப்பியம் கூறும் இலக்கண விதிகளை விளக்கவே பாடப்பெற்றுள்ளன. ஆகவே, இவற்றிற்குக் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முந்திய ஒரு காலத்தைத் தருவது இயலாது. இப்பாடல்கள் பாடப்பெறுவதற்கு முன்பே, ஆரியர் கடவுள்கள், தமிழ்நாட்டில் நன்கு இடங்கொண்டு விட்டன என்ற உண்மையாலும், இது, நன்கு உறுதி செய்யப்படும். ஆனால், கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையும் இறந்து போகாமல் வழக்கில் இருந்து வந்த, நளிமிகப் பழைய தமிழ்ப் பழக்க வழக்கங்களின், எதிரொலிகளும், இப்பாக்களில், இடம் பெற்றுள்ளன. மேலும் பழந்தமிழ்ப் பாடல்கள், ஈரேழ் வரிகளைக்கொண்ட இனிய சிறுபாடலாம், ஆங்கிலமொழி "சானெட்" (Sonnet) எனப்படும் பாடல்கள் போல், கூறவரும் ஒரு மெய்ப்பாட்டுப் பொருளைச் சுருங்கிய வாய்பாட்டில் வளக்கினவாக, கலித்தொகையில், ஒரு நிகழ்ச்சி, வேண்டுமென்றே பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு நீண்ட பாட்டாக அடித்து நீட்டிக்கப்பட்டுளது. அவ்வகையில் காதலன், பொருள் தேடச் சேணாடு செல்வதற்கான முயற்சி மேற்கோள்வது அறிந்து காதலி கொள்ளும் கடுந்துயர், அவளைப் போகாவாறு தடுக்கும் அவள் முயற்சி ஆகியவற்றைப் பாலைக் கவி கூறுகிறது: பிரிவு தரும் அக்கடுந்துயர், கலியில், பல நூறுக்கும் மேலான வரிகளில் விளக்கப்பட்டுளது. ஏனைய கவிகளும் கூட, ஒவ்வொரு திணைக்கான அகத்துறைப் பாடல்களுக்குத், தொல்காப்பியர் விதித்திருக்கும் இலக்கணத்தை ஒட்டிக், கூடலும் ஊடலும் கலந்த காதல் வாழ்வின் ஏற்ற இழிவுகளின் ஊடே, முறையாக நடைபோடுகின்றன. ஆகவே, ஒவ்வொரு கலியும், பெரும்பாலும், குறுப்பிட்ட ஒரு திணையின் பெருங்காப்பியமாம் என அழைக்கப்படுமளவு, ஒவ்வொரு

த. வ. 11-23

த.வ.II-23