பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழர் வரலாறு


கலியிலும், ஒரு கதையின் தொடர்ச்சியைக் காணலாம். தலைவி, அவள் தோழி, பரத்தையர் உறவு கொண்டுவாழும் தலைவன், அவன் விரும்பும் பரத்தை தலைவனுக்கு, அப்பரத்தையைக் கொண்டுவந்து தருவானும், பின்னர்த் தலைவனுக்காகத் தலைவிபால்துாது சென்று இருவரையும் ஒன்றுபடுத்துவானுமாகிய பாணன் ஆகியோரின் கூற்று இடம் பெறும், பரத்தமை ஒழுக்கத்தின் காவியமாம் மருதக்கலி, ஈண்டு ஓர் எடுத்துக்காட்டாகவே காட்டப்பெறல் தகும்: திணை விளக்கத்திற்கு மேற்கொள்ளப்படும் இம்முறையின் விளைவு, அதிகாரம் 12ல் எடுத்துக் காட்டப்பெற்ற ஐந்திணைப் பாடல்களின் கூற்று மற்றும் கருத்துக்களின் சலிப்பூட்டுமளவான கூறியது கூறலாய் முடிகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய கலியில், ஞாயிற்றின் கடும் வெப்பம், பேய்த்தேர் என அழைக்கப்படும் கானல் நீர், வழியின் கொடுமை, பொருள்தரும் இன்பத்தினும், காதல் தரும் இன்பத்தின் சிறப்பு, பிரிவுதரும் துயரால் தலைவியின் மேனி நலம் கெடல் மற்றும், பாலைக்குரிய பிற நிகழ்ச்சிகளெல்லாம் முடிவு காணமாட்டாவாறு நிறைந்துள்ளன்: இந்த ஒரு கருத்தை விளக்க, ஒரு கலிப்பாவின் முழுப்பாட்டு அல்லது அதன் பெரும் பகுதியை எடுத்துக்காட்டல் இயலாது; ஒரே பொருள் அடுத்தடுத்து வரும் மூன்று பாடற்பகுதிகளில் கூறப்படுவதாம் கூறியது கூறலைவிளக்க, ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்காட்டுக்கள் காட்டப்படும், காதலனுடன் போய்விட்ட மகளைத்தேடிச்செல்லும் தாய்க்கு, இடைவழியில் அந்தணத்துறவி ஒருவர் கூறிய அமைதியுரை வருமாறு : நறுமணப்பொருள் பலவும் கலக்கப்பெற்ற நல்ல சந்தனம், தன்னை, மேனியில் பூசிக்கொள்பவர்க்குப் பயன்படுவதல்லது, மலையிலேயே பிறந்ததாயினும் அம்மலைக்கு அது என்ன பயனைக்கொடுக்கிறது : அது போலத்தான், ஆராய்ந்து நோக்கின், உன்மகளும் உனக்குப் பயன்படாள். அவளை மணப்பானுக்குகே பயன்படுவாள் சிறந்த வெண் முத்துக்கள் தம்மை அணிந்து கொள்வார்க்கு அழகு தந்து பயன்படுவதல்லது கடலிலே பிறந்தாலும், அக்கடலுக்கு