பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தமிழர் வரலாறு


தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேணிர் உண்ட குடையோர் அன்னர்;
நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோம்
அல்குநர் போகிய ஊரோர் அன்னர்:
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்

குடினர் இட்ட பூவோர் அன்னர்."
-பாலைக்கலி ; 22:7-13;

மேலே எடுத்துக் காட்டினவற்றுள்ளாவது வேறுவேறுபட்ட கருத்துக் கருவூலங்களாவது உள்ளன: ஆனால், களிறு, புலிகளுக்கிடையிலான சண்டை, தினைப்புனங்களிலிருந்து கிளிகளை ஓட்டுதல், கடற்கரை மணலில் நண்டுகள் ஊர்தல், மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் கட்டுமரங்களை முன்னும் பின்னுமாகத் தள்ளிவிடும் அலைகள் ஆகிய நிகழ்ச்சிகளை வெறுப்பூட்டுமளவு மீண்டும் மீண்டும் கூறுவதில் நயம் இல்லை. ஆனால், கலித்தொகையின் பெரும் பகுதியை அவை தான் கொண்டுள்ளன.

கருத்துக்களை உருவகப்படுத்தல்

ஒரே கருத்தை, இவ்வாறு வெறுப்பூட்டுமளவு , திரும்பத் திரும்பக் கூறலுக்கும், கூற விரும்பும் கருத்தை வெளிப்பட கூறாது, மறைத்து மொழிக்கிளவியால் கூறும் ஒரு முறை வளர்ந்து விட்டதும். இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும், காதல் ஒழுக்கத்தோடு தொடர்புடைய யாதேனும் ஒரு நி க ழ் ச் சி யோ டோ, அ ல் ல து நிகழ்ச்சிகளோடோ தொடர்புடையதாக ஆக்கப்பட்டுதுவே ஒரு காரணமாகும். குறிக்கோளை நேரிடையாகக் கூறாது, குறியீடுகள் மூலம் கூறும் முறையினை மிகப் பெருமளவில் மேற்கொள்ளும் வழக்கம், செய்யுள் நடைக்கே ஒரு நோயால்விட்டது: பாக்களும் புதிர் போடும் விடுகதையாம் நிலைக்குத் தாழ்ந்துவிட்டன் உள்ளுரை உவமம் எனப்படும், இது: