பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை நூற்றிஐம்பது

357


போலும் குறியீட்டுச் சொற்களை ஆளுதல், பழைய இலக்கியத்தில், இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆளப்பட்டது: அது, ஒரு சொல் அல்லது அடைமொழியளவோடே நின்றது. ஆனால், இக்கலிப்பாக்களில் அது, மிகநீண்ட உருவகத் தொடராகி விட்டது: பின்வருவது ஓர் எடுத்துக்காட்டு: "மலரும் விரும்பும் விடியற்காலத்து ஞாயிற்றின் ஒளியை மறைக்குமளவு, மூங்கில் அடர்ந்து விளைந்திருக்கும் மாணிக்கப் பாறையில், மணம் வீசும் நல்ல சுனையில், அழகு பெற வளர்ந்திருக்கும் காந்தளின் அழகிய குலையினை, பெறுதற்கரிய மாணிக்கமணியினையும் அச்சம் ஊட்டும் பொறியினையும் உடைய பாம்பு, தண்ணீர் குடிப்பதாகக் கருதிப் பெரிய மலைகளையும் கீழ் மேலாக்குமாறு போல வீசும் காற்றோடு கூடி மழையின் இடியேறு இடித்தலால் எழுந்த பேரொலி, பெருமளவில் மலர்ந்து மனம் வீசும் மலர்களையுடைய மலைச்சாரல் எங்கும் சென்று ஒலிக்கவே, சிறுகுடிவாழ் கானவர் விரைந்து உறக்கம் ஒழிந்து எழுந்து கொண்டனர்.

"விடியல் வெம் கதிர் காயும் வேய்அமல் அகலறைக்
கடிசுனைக் கவினிய காந்தளம் குலையினை
அடுமணி, அவிர் உத்தி அரவு நீர் உணல்செத்துப்
பெருமலை மிளிர்ப்பு அன்ன காற்றுடைக் கனைபெயல்
உருமுக்கண் உறுதலின், உயர் குரல் ஒலி ஓடி
நறுவிய நனஞ்சாரல் சிலம்பலின், கதுமெனச்

சிறுகுடி துயில் எழும்."
-குறிஞ்சிக்கலி : 9 : 1-7.

அழகிய இவ்வரிகளில் கூறப்பட்டிருக்கும் உள்ளுறை உவமப்பொருள் உரையாசிரியர் கூற்றுப்படி வருமாறு: மாணிக்கப் பாறை தலைவி வாழும் மனை, சுனையில் உள்ள காந்தள், சுற்றத்தார் பேணி வளர்க்க அழகு பெற்ற தலைவி, மணம் தந்து மகிழ்விக்கும் காந்தள், அச்சந்தரும் பாம்பு போல் தோன்றியது, பின்னர் இல்லறமாம் இனிமைதரும்

‘o.