பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

தமிழர் வரலாறு


களவொழுக்கம், பிறர்க்குத் தீங்கு போல் தோன்றியது; உருமேறு இடித்தலால் எழுந்த ஓசை, குறவர் குடியிருக்கும் மலைச் சாரலெங்கும் சென்று ஒலித்தது, தீதாகக் கருதிய அயலவர் கூறிய அவர் உரைகேட்டதாய் கடிந்து கூறிய சொல் எங்கும் பரவியது. சிறுகுடியில் உள்ளார் துயில் எழுந்தது, காவல் மிகுதியால், தலைவி களவொழுக்கம் வாய்க்கப் பெறாது வருந்தி உறக்கம் இன்றி இருந்தது; நற்றிணைப் பாடல்களில், காலத்தால் பிற்பட்ட சில பாக்களிடையேயும், இத்தகைய உள்ளுறை உவமைகள் இடம் பெற்றுள்ளன. சமஸ்கிருத இலக்கியத்தால் ஈர்க்கப்படுவதற்கு முந்திய காலத்துப் பழித்தமிழ்ம் பாடல்களில், இவை போலும் உள்ளுறை உவமம் இடம் பெறுவது அரிதினும் அரிதாம் ஆதலின் இது காலத்தான் பிற்பட்ட சமஸ்கிருத மொழிக் காதற் பாக்களின் எதிர் ஒளியே ஆம் என நான் கருதுகின்றேன்.

ஆரிய உவமைகள்

இப்பாக்களில், ஆரியப் புராணக் கதைகளிலிருந்து பல உவமைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைவியைப் பிரிந்து தலைவன் செல்ல இருக்கும் வழியின் இயல்பினைத் தோழி பின் வருமாறு விளக்கியுள்ளார். "உலகம் தோன்றிய காலத்தில், அவ்வுலகைப் படைக்கத் தோன்றியவனாகிய முதியவனாம் நான்முகன் முதலான தேவர்கள் வந்து வேண்ட, எவர்க்கும் அடங்காதவராகிய அவுனர்களின் ஆற்றலை அழிப்பதற்கு. யமனைப் போல் சினங்கொண்டு, வஞ்சனை செய்யும் அவுணர்களை, வஞ்சிக்காது எதிர்நின்று அழிக்கும் பேராற்றலோடு, முக்கண் இறைவனாம் சிவன், அவுணர்க்குரிய மூன்று கோட்டைகளையும் பார்த்துச் சினங்கொள்ள, அப்போது அவன் மூகம் சினத்தீயைக் கக்கியது போல, ஞாயிறு கடுமையாகக் காய்வதால், மலைகள் எல்லாம் பிளவுண்டு பிறரால் சினந்து கொள்வதற்கு இயலாத அரிய மழுவாயுதம் ஏந்திய அவ்விறைவன் சினத்தால், அம்முப்புரங்களும் அழிந்து உதிர்ந்தனபோல், போவார்க்கு வழி இல்லை