பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

தமிழர் வரலாறு


"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனனாக,
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல."
- குறிஞ்சிக்கலி : 2 : 1-5

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உவமை, இயற்கையிலிருந்தோ, புராணக்கதையிலிருந்தோ எடுக்கப்படாமல், தர்ம சாஸ்திரத்திலிருந்து எடுக்கப்பட்டு, இதுபோலும் அறவுரைகள் பல்கியிருந்தும் பிற்காலச் சமஸ்கிருத இலக்கியத்திலிருந்து நேரே வந்துளது. "வந்து இரப்பார்க்கு வாரி வழங்குவதில் குறை காட்டாமல் வழங்கியும், இல்லறம் நிகழ்த்தம் முறையறிந்து அதன்படி வாழ்ந்த, தீவினை இல்லாதவனுடைய செல்வம், மேலும் மேலும் பெருகுவது டோல், ஆற்றங்கரை மரம் தழைத்து வளர"

"ஈதலில் குறைகாட்டாது அறன் அறிந்து ஒழுகிய

தீதுஇலான் செல்வம் போல் தீங்கரை மரம்நந்த"
- பாலைக்கலி : 26 : 1-2

அக்காலத்தில் தமிழ், சமஸ்கிருத செய்யுட் கற்பனைகளுக்கிடையே எத்தனை நெருக்கமான கூட்டணி நிலவியது என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இவையெல்லாம் இக்கலிப்பாக்கள் அ னை த் து ம், ஆரியக்கலாச்சாரம், தமிழகத்தில் முக்கியமான இடத்தை அடைந்து விட்ட கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வந்தனவாம் என்பதற்கான சான்றுகளும் ஆம்.

பழந்தமிழ்ச் செய்யுளுணர்வு அழியாது இடங்கொண்டு இருத்தல்.

ஆரியக் கருத்துக்களின் நுழைவு எண்ணிக்கையால் மிகுவது, பழைய தமிழ்ச் செய்யுளுணர்வு அறவே மறைந்துவிட்டது எனப் பொருளாகி விடாது. வேனிற் பருவ வரவைக்