பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

தமிழர் வரலாறு


பவளம் போல் சிவந்த வாயினையும், அழகிய நெற்றியினையும் உடையவள்."

"மின்ஒளிர் அவர் அறல் இடைபோழும் பெயலேபோல்
பொன்நகை தகைவகிர், வகைநெறி வயங்கிட்டுப்
போழிடை இட்ட கமழ் நறும் பூங்கோதை,
இன்நகை, இலங்கு எயிற்றுத், தேமொழித் துவர்ச்
நன்னுதால் !" - [செவ்வாய்

- குறிஞ்சிக்கவி : 19 : 2-5

ஒரு தலைவன், தான் விரும்பும் தலைவியை விடுகதை வடிவில் எவ்வாறு புகழ்கின்றான் என்பதற்கான எடுத்துக்காட்டு இதோ : "நெற்றி, காண்பவர் வியக்குமளவு தேய்ந்து சிறுத்துளது. ஆயினும் அது பிறைத்திங்கள் அன்று; முகம் மறுவற்று ஒளிவீசுகின்றது; ஆயினும் அது முழுமதி அன்று: தோள், மூங்கிலின் தன்மை பெற்றுளது; ஆயினும் அது மூங்கில் வளரும் மலை அன்று; கண் நீலமலரின் தன்மை பெற்றுளது; ஆனால், அது அம்மலர் விளையும் இடம் அன்று: சாயல் மெத்தென நடை பயிலுகின்றது; ஆயினும், அது மயில் அன்று; சொல்கூறியதே கூறித் தளர்கிறது: ஆயினும் கிளி அன்று."

"ஐ தேய்ந் தன்று, பிறையும் அன்று :
மை தீர்ந்தன்று, மதியும் அன்று :
வேய் அமன்றன்று, மலையும் அன்று :
பூ அமன்றன்று, சுனையும் அன்று :
மெல்ல இயலும், மயிலும் அன்று :

சொல்லத்தளரும், கிளியும் அன்று,"
- குறிஞ்சிக்கலி : 19 : 9 - 14;

புதிர் போல் அல்லாத மேறு ஒரு வருணனை இது : "அழகிய முகம் முழுமதியை ஒத்திருக்க, மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட நின் கருங்கூந்தல், உன் முகத்துக்கு ஒப்பாகும்